டிரான்ஸ்பர் கவுன்சிலிங் எப்போது? பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!!

Posted By:

சென்னை: பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் கவுன்சிலிங் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்துள்ள இந்த ஆசிரியர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டிரான்ஸ்பர் கேட்கும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கை பள்ளி கல்வித்துறை நடத்தி வருகிறது. இந்த கவுன்சிலிங் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்றது.

டிரான்ஸ்பர் கவுன்சிலிங் எப்போது? பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!!

இந்த கவுன்சிலிங்கின்போது 6,402 ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் பெற்று அவர்கலுக்கு விருப்பமான இடங்களைத் தேர்வு செய்தனர்.

ஆனாலல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் காலிப் பணியிடங்கள் குறைவாக இருந்ததால் டிரான்ஸ்பர் கவுன்சிலிங் நடத்தப்படாமல் நிறுத்தபப்பட்டது. கூடுதலாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் 2,307 பேர் மட்டும் பணி நிரவல் மூலம் டிரான்ஸ்பர் பெற்றனர்.

இந்த நிலையில் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியவற்றுக்கான பதவி உயர்வு கவுன்சிலிங் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 800 காலியிடங்கள் இருக்கின்றன.

இந்த இடங்களுக்கு டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை உடனடியாக நடத்தவேண்டும் என்று என பட்டதாரி ஆசிரியர்கள் கோருகின்றனர்.

ஆனால், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 4, 5 மாவட்டங்களில் மட்டுமே அதிகக் காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கவுன்சிலிங் தேதிகள் முடிவு செய்யப்படவில்லை என்றும், இந்த ஆண்டில் கவுன்சிலிங்கை எப்போது நடத்துவது என்பது தொடர்பாகவும் விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

English summary
Graduate Teachers who are working in Tamilnadu schools urged the Government to announce Transfer Counselling dates.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia