அரசு நிதி ஒதுக்கவில்லை... ஆண்டு விழா கொண்டாட முடியாத அதிருப்தியில் அரசுப் பள்ளிகள்!

Posted By: Jayanthi

சென்னை: தொடக்கப் பள்ளிகளில் ஆண்டுவிழா நடத்த அரசு நிதி ஒதுக்காமல் விட்டதால் ஆண்டு விழா நடத்த முடியாமல் தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ஆண்டுவிழா நடத்துவதற்காக இந்த கல்வி ஆண்டு முதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு நிதி ஒதுக்கவில்லை... ஆண்டு விழா கொண்டாட முடியாத அதிருப்தியில் அரசுப் பள்ளிகள்!

இதன்படி மார்ச் மாதம் இறுதிக்குள் ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டு விழா நடத்தியாக வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இதற்காக நடுநிலைப் பள்ளிகளில் விழா நடத்த ரூ2350, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.2450 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி ஆண்டு விழா, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

ஆனால் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் தொடக்கப் பள்ளிகளுக்கு நிதி ஏதும் ஒதுக்கவில்லை. மார்ச் மாதம் முடிய நாளை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் ஆண்டு விழாவை நடத்துவது எப்படி என்று புரியாமல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஒரு சில தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே தங்கள் சொந்த பணத்தில் செலவிட்டு ஆண்டு விழாவை நேற்று முன்தினம் நடத்தியுள்ளனர். இன்னும் பல தொடக்கப் பள்ளிகளில் ஆண்டுவிழா நடக்குமா நடக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட அலுவலகத்தில் கேட்டபோது, இது போன்ற நிதியை மத்திய அரசு ஒதுக்கினால் தான் நாங்கள் வழங்க முடியும் என்று தெரிவித்தனர்.

Govt primary schools are in big disappointment due to not allocating money for annual day celebrations.

English summary
Govt primary schools are in big disappointment due to not allocating money for annual day celebrations.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia