இனி ஜாலி்தான்... அனைத்து பல்கலைக்கழகங்களில் வை-ஃபை வசதி!!

Posted By:

சென்னை: அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் வை-ஃபை வசதியை மத்திய அரசு விரைவில் வழங்கவுள்ளது.

செய்தி மற்றும் தொலைதொடர்பு வசதி மூலம் கல்வி வழங்கும் தேசியத் திட்டத்தின் (NMEICT) கீழ் இந்த வசதியை வழங்கவுள்ளது மத்திய அரசு. இத்தகவலை மக்களவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

இனி ஜாலி்தான்... அனைத்து பல்கலைக்கழகங்களில் வை-ஃபை வசதி!!

இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை அலகாபாத் பல்கலைக்கழகமும், நார்த் ஈஸ்டர்ன் ஹில் பல்கலைக்கழகமும் பயனடைந்துள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மீதமுள்ள 38 மத்திய பல்கலைக்கழகங்களில் இந்த வை-ஃபை வசதி விரைவில் வழங்கப்பட்டு விடும். இந்தத் திட்டத்துக்கான ஒப்புதலை NMEICT-யின் 31-வது கூட்டத்தில் மத்திய அரசு வழங்கியது. இந்தத் திட்டத்துக்காக ரூ.335.85 கோடி செலவழிக்கப்படும் என்றார் அவர்.

English summary
The government will provide Wi-fi connectivity to all central universities under the National Mission on Education through Information and Communication Technology (NMEICT) programme. The government announced the plan in Lok Sabha on December 21. In a written reply in Lok Sabha, Human Resource Development (HRD) Minister, Smriti Irani said that two central universities, Allahabad University and North Eastern Hill University are already covered under Department of Electronics and Information Technology (Deity) programme.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia