சென்னை: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அரசு சார்பில் ஐடிஐ தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக முழுமையான அரசு ஐடிஐ இன்ஸ்டிடியூட் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்டிடியூட்டை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தொடங்கிவைத்தார்.

திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகள் பயன்பெறும் வகையில் இந்த இன்ஸ்டிடியூட் தொடங்கப்பட்டுள்ளது.தமிழக சிறைத்துறையும், தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்க நரகமும் இணைந்து இந்த இன்ஸ்டிடியூட்டை தொடங்கியுள்ளன. இங்கு கைதிகளுக்கு பயிற்சி,வேலைவாய்ப்பு தொடர்பான தொழில்கள், கைத்தொழில்கள் கற்றுத்தரப்படும்.
இந்த இன்ஸ்டிடியூட்டில் தற்போது பல்வேறு பயிற்சிகளுக்காக 168 கைதிகள் இணைந்துள்ளனர். இவர்கள் சென்னை புழல், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, வேலூர், சேலம், கடலூர் சிறைகளில் உள்ளனர். சிலர் திருச்சி சிறையிலேயே உள்ளனர். பயிற்சி பெற வசதியாக மற்ற சிறைகளில் உள்ளவர்கள் விரைவில் திருச்சி சிறைக்குமாற்றப்படுவர்.


Click it and Unblock the Notifications

