மருத்துவக் கல்விக்கு முக்கியத்துவம்: மத்திய அமைச்சர் ஜேட்லி

Posted By:

சென்னை: மருத்துவக் கல்விக்கு மத்திய அரசு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அது இனி வரும் காலங்களிலும் தொடரும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

ஏஐஐஎம்எஸ் பட்டமளிப்பு விழா

புது டெல்லியிலுள்ள ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் (ஏஐஐஎம்எஸ்) மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் 43-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார்.

மாணவர்களுக்கு வாழ்த்து

விழாவில் அவர் பேசியதாவது:
ஏஐஐஎம்எஸ் கல்லூரியில் பயின்று பட்டம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவ சேவை, இறைவனுக்குச் செய்யும் சேவை போன்றது.

உறுதிமொழி

அதை மாணவ, மாணவர்கள் உணர்ந்து இந்தச் சேவையை கடைசி வரை செய்யவேண்டும்.
அதற்காக இப்போது அவர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொள்ளவேண்டும்.

 

 

முக்கியத்துவம்

சுகாதாரத்துறைக்கு எப்போதும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதேபோல மருத்துவக் கல்விக்கும் எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
ஏஐஐஎம்எஸ் கல்லூரி, மருத்துவமனைக்கு தொடர்ந்து தனது ஒத்துழைப்பை மத்திய அரசு வழங்கும்.

மருத்துவக் கல்வி முன்னேற்றம்

மேலும் மருத்துவக் கல்வியை முன்னேற்ற போதிய முயற்சிகள் எடுக்கப்படும். மருத்துவ வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மருத்துவமனையில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார் அவர்.

English summary
43rd Annual Convocation ceremony of All India Institute of Medical sciences was held in New Delhi today.Speaking on the occasion, Finance & I&B Minister Arun Jaitley appreciated the contribution of AIIMS as centre of excellence in the health sector.He said that the government will do its utmost to support expansion of AIIMS.The Union minster also emphasized the need for improvement of medical education and infrastructural facilities in the health sector.Speaking on the occasion, Health and Family Welfare Minister J P Nadda said that under the dynamic leadership of Prime Minister Narendra Modi, the government is paying attention to the expansion of medical education in the country.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia