ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் பென்ஷன் தொடர்பான கோரிக்கையை வைத்து போராட்டம் !!

Posted By:

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் . அரசு ஊழியர்கள் சங்கங்கள் ஜாக்டோ ஜியோ இணைந்து போராட்டம் நடத்துகின்றன. அரசு ஆசரியர்கள் தங்களது கோரிக்கையை இணைத்து கொடுத்து போராடத்தில் பங்கு பெறுகின்றனர்.

ஆசிரியர்கள் போராட்டத்தால் அரசு பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வந்து திரும்பி  செல்கின்றனர்

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து ஜாக்டோ ஜியோ இணைந்து இந்த போராட்டத்தை  நடத்துகின்றன. அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்தில் புதிய பென்ஷன் கொள்கையை கைவிட்டு பழைய பென்ஷன் கொள்கையை திரும்பி வழங்கவேண்டும் .

ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசு விரைந்து முடிவு எடுக்கவேண்டும். 6வது ஊதிய குழுவை கலைந்து 7 ஆம் ஊதிய குழுவை அமல்படுத்த வேண்டும். அனைத்து கோரிக்கைகளையும் ஆணையாக  வெளியிட வேண்டும்.  அக்கோரிக்கைகளை 1.1.2016 முறைப்படி அறிவிக்க வேண்டும். 20 சதவீகித நிவாரணதொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் போராட்டத்தால் பள்ளிகளுக்கு  மாணவர்கள் சென்று திரும்பி வீட்டிற்கு செல்கின்றனர்.  இன்றைய பாடவேளை செயல்படாமல் முடங்குகிறது . இது தொடர்பாக அரசு விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டும் .

 அரசு 27 ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து முடிவெடுத்து இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளன. 32 மாவட்டங்களின் பள்ளிகளின் சாவிகள் அந்தந்த மாவட்ட கல்வித்துறையிடம்   வழங்கப்பட்டுள்ளது.

3 லட்சம் அரசு ஊழியர்கள் இணந்து பணியாற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த்தால் 5800 உயர்நிலை பள்ளிகள் மற்றும் 50000 ஆரம்ப பள்ளிகள் இப்போராட்டத்தால் இன்று ஆசிரியர்கள் இன்றி இருக்கின்றது . இந்த போராட்டம் நடக்கும் வரை பள்ளி தொடர்பான வேலைகள் செய்ய போவதில்லை என அறிவித்துள்ளனர் . ஆதலால் அரசு இதனை உடனடியாக ஆலோசித்து  முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது . 

சார்ந்த பதிவுகள்:

தமிழ்நாடு அரசு பகுதிநேர ஆசிரியர்களுக்காக ஊதியகுழு அமைக்கும் என அமைச்சர் அறிவுப்பு

English summary
above article tell about strike of government teachers of Tamilnadu for their demands

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia