மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க .. ரூ.758 கோடி ஒதுக்கீடு!

Posted By:

சென்னை: இந்த ஆண்டு 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதற்காக ஒரு பெரும் தொகையை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இது மாணவ மாணவியர்களுக்கு பெரிதும் பயனுள்ள ஒரு திட்டமாகும்.

மேலும் அரசு பள்ளிக்கு செல்லாத 36,930 குழந்தைகளை கண்டறிந்துள்ளது அந்த குழந்தைகள் இந்த வருடம் பள்ளிகளில் சேர்க்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி

அடிப்படைக்கல்வியாவது அனைவரும் கற்றல் அவசியமான ஒன்றாகும். பள்ளிக்கல்விக்காக ரூ. 26,932 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது மாநில அரசு. மேலும் கல்வியில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து உயர்க்கல்வி பயில வரும் மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் விதத்தில் மாநில அரசு முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே திரும்ப வழங்கும் திட்டத்திற்காக ரூ. 680 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

 

 

பல்கலைக்கழகங்களுக்கு நிதி

அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கான ரூ. 139 கோடி உள்பட அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் மானியம் வழங்குவதற்காக ரூ. 320 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்க்கல்வித்துறைக்காக ரூ. 3680 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் 12524 கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக ரூ. 25 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமல்ல ரூ. 165 கோடி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

விடுதி மாணவர்களுக்கு

கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு ரூ. 875ல் இருந்து ரூ. 1000 ஆக அதிகரித்துள்ளது. அது போல பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு ரூ.755 ல் இருந்து ரூ. 900 ஆக அதிகரித்துள்ளது.

இலவச சைக்கிள்

இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்காக மாநில அரசு ரூ. 180 கோடியை ஒதுக்கியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபின மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படும்.

உண்டு உறவிடைப் பள்ளிகள்

பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக அரசு ரூ. 24 கோடி செலவில் ஆசிரியர் குடியிருப்புகளுடன் 2 உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிகள் ஜவ்வாது மலையில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் குழந்தைகள் அதிகமாக பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்காக அரசு ரூ. 55 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த வருடம் 4.92 லட்சம்
மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளது. அவர்களின் நலனைப் பேணிப் பாதுகாப்பதற்கும். அவர்களுடைய பொருளாதார நிலை உயர்வதற்கும் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது.

English summary
Government Rs. 758 crore to provide laptops to students and Rs. 180 crore to provide cycle to students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia