காந்தி தங்கிய கல்லூரியை புதுப்பிக்க ஆந்திர அரசு முடிவு!!

சென்னை: மகாத்மா காந்தி தங்கிய கல்லூரியை புதுப்பித்து பயன்படுத்த ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே சுதந்திரப் போராட்ட வீரர் கோபெல்லா ஹனுமந்து ராவ் உள்ளிட்டோர் ஆந்திரா நேஷனல் கல்லூரியை 1910-ல் தொடங்கினர்.

காந்தி தங்கிய கல்லூரியை புதுப்பிக்க ஆந்திர அரசு முடிவு!!

இங்கு பல்வேறு தொழில் படிப்புகள் வழங்கப்பட்டு வந்தன. சுதந்திரப் போராட்டத்தின்போது 1921-ல் மகாத்மா காந்தி இங்கு 2 நாள் தங்கினார். இங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் காந்தி தான் தங்கியது குறித்து எழுதியுள்ளார். நான் 2 நாள் இங்கு தங்கு தங்கி அமைதியாகப் பொழுதைக் கழித்தேன். இந்தப் புனிதமானக் கல்விக்கூடம் இன்று இருப்பது போல என்றும் மிகப்பெரிய கல்வி நிறுவனமாகத் திகழவேண்டும் என்று காந்தி அந்த பார்வையாளர் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் இந்த ஆந்திரா நேஷல் கல்லூரி சிதிலமடைந்து வுகிறது. மேலும் சேர்க்கைக் குறைவாக உள்ளதாலும், ஆசிரியர் பற்றாக்குறையாலும் கல்லூரி மோசமான நிலையில் உள்ளது.

இதைத் தொடர்ந்து இந்தக் கல்லூரியைப் புதுப்பிக்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மோசமாக உள்ள கல்லூரிக் கட்டடங்களைப் புதுப்பிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இங்கு புதிதாக மீன்வள பாலிடெக்னிக் கல்லூரியைத் தொடங்குவதன் மூலம் ஆந்திரா நேஷனல் கல்லூரியும் வளர்ச்சியடையும் என்று கலால்துறை அமைச்சர் கே. ரவீந்திரா தெரிவித்தார்.

விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்றார் அவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Andhra Pradesh government plans to utilise the abandoned portion of Andhra National College by setting up a fisheries polytechnic college. Freedom fighters led by Kopella Hanumantu Rao have established the premiere institution in February 1910, offering various courses including technical education and industrial training. Mahatma Gandhi spent two days at the college in 1921.However, at a time when the institution is losing its sheen due to poor percentage of admissions, lack of teaching staff and employment oriented courses, the State government has decided to revive the academic institution.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X