சென்னை: புதுச்சேரி மாநில அரசு நிர்வாகத்தில் ஸ்டெனோகிராபர் வேலை காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
கிரேட் 2 ஸ்டெனோகிராபர் வேலையாகும் இது. மொத்தம் 41 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 5-ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் செய்யவேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது 18 முதல் 32-க்குள் இருக்கலாம். ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயதுச் சலுகை உண்டு.
விருப்பமுள்ள நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் The Under Secretary to Govt. (DP & AR - Exam), Department of Personnel and Administrative Reforms (Personnel Wing), Chief Secretariat, Puducherry என்ற முகவரிக்கு பிப்ரவரி 5-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு http://dpar.puducherry.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












