8ம் வகுப்பு பாஸா.. அரசு தேர்வுத்துறையில் ஓ.ஏ. வேலை காலி.. விண்ணப்பியுங்கள்!

Posted By:

சென்னை: அரசு தேர்வுத் துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு 5 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதனை அரசு தேர்வுகள் இணை இயக்குனர் செ.அமுதவல்லி தெரிவித்துள்ளார்.

அரசுத் தேர்வுத்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு 5 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னையில் 3 இடங்களும் கோவை மற்றும் திருச்சியில் தலா ஒரு இடங்களும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8ம் வகுப்பு பாஸா.. அரசு தேர்வுத்துறையில் ஓ.ஏ. வேலை காலி.. விண்ணப்பியுங்கள்!

கல்வித் தகுதி -

குறைந்தப்பட்ச கல்வித் தகுதி 8ம் வகுப்பு. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதற்கு மேல் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு -

18 வயது நிரம்பியவர்கள் அரசு தேர்வுத் துறை அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை -

தகுதியுடையவர்கள் தங்கள் பெயர், கல்வித்தகுதி, பிறந்த தேதி, முகவரி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக அட்டை, தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவத்துடன் மேலும் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், சான்றிதழ்களின் நகல்கள், முகவரி எழுதப்பட்ட கவர் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி -

ஏப்ரல் 3ம் தேதி 4 மணிக்குள் விண்ணப்பப்படிவம் கீழ்க்கண்ட முகவரியை சென்றடைய வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி -

அரசு தேர்வுகள் இயக்குனரின் செயலாளர்,
அரசு தேர்வுகள் இயக்கம்,
டி.பி.ஐ வளாகம்,
கல்லுரிச்சாலை,
சென்னை - 600 006.

English summary
Government Examination Department has Announced Office Assistant Jobs. 8th std finished candidates can apply for this post. 5 vacancies are t

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia