மாணவர்கள் குறை தீர்க்கும் எண் அரசு தேர்வாணையம் அறிவிப்பு

Posted By:

சென்னை :10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மிகவும் நெருங்கி விட்டது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 8ம் தேதி முதல் மார்ச் 30ம் தேதி வரை நடை பெறும். 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

12ம் வகுப்புத் தேர்வு தொடங்குவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. மாணவ மாணவியர்கள் பொதுத் தேர்விற்காக மிகவும் பரபரப்பாகப் படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் மாணவர்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களைத் தெரிவிப்பதற்காக அரசு தேர்வாணையம் நான்கு டெலி போன் நம்பர்களை தெரிவித்துள்ளது. இந்த நான்கு நம்பர்களிலும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அரசு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் குறை தீர்க்கும் எண் அரசு தேர்வாணையம் அறிவிப்பு

மேலும் தங்கள் சந்தேகங்களைத் தெரிவித்து அதற்கு தகுந்த விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அத்துடன் தங்கள் கருத்துக்களையும் மாணவ மாணவியர்கள் தெரிவித்துக் கொள்ளலாம் என அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது. தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

அரசு தேர்வுகள் இயக்கம் வழங்கியிருக்கும் நம்பர்கள் -

10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை இந்த நான்கு 8012594114, 8012594115, 8012594122, 8012594124 தொலைபேசி எண்கள் மூலம் தெரிவிக்கலாம்.

English summary
Government examination authority has announced that phone numbers for the students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia