ஐஐடிகளை உலகதரத்தில் உயர்த்த அரசு நிதி ஒதுக்கீடு !!

Posted By:

ஐஐடியின் தரத்தை மேம்படுத்தி உலக அளவில் மிகபெரிய அளவில் கொண்டு செல்ல ரூபாய் 8,700 கோடி ஒதிக்கீடு செய்ய மத்திய நிதிஅமைச்சகம் அறிவித்துள்ளது . டைம் வெளியிட்டுள்ள 77 நாடுகளின் சிறந்தகல்வி நிறுவனங்களின் பட்டியலில் டாப் 200 தரத்தில் ஒரு இந்திய கல்வி நிறுவனமும் இடம் பெறவில்லை . இந்தியன் இண்டிஸ்டியூட் ஆஃப் சைன்ஸ் ஐஐஎஸ்சி மட்டும் 201 இடங்களிலிருந்து 250 இடங்களுக்குள் இடம்பெற்றது . மற்ற இந்திய நிறுவனங்கள் எதுவும் இடம்பெறவில்லை . இதனை டைம் இதழின் பதிநான்காம் வருட கொண்டாட்டத்தில் வெளியிட்டுள்ள உலகத்தில் உள்ள 1000 பல்கலைகழகங்களை முதல் ஆயிரம் தரத்தை வெளியிட்டது . டைம்ஸ் கணிப்பில் முதல் இரநூறு இடங்களை பெறவில்லை . மேலும் 30 முதல் 31 நிறுவனங்கள் மட்டுமே தரகுறியீட்டில் இடம் பெற்றிருந்தது .

இந்திய பல்கலைகழங்கள் 351 இடங்களிலிருந்து 800 இடங்கள் வரை தரகுறியீட்டில் இருந்தன . இந்தியன் ஐஐடிகள் எதுவும் அதிகபட்ச தரகுறியீட்டை பெறவில்லை. இதனையடுத்து நிதியமைச்சகம் பரிந்துரையின் பேரில் ஐஐடிகளின் அடிப்படையை சிக்கலை சரிசெய்து , தேவையான் நிதியை அதிகப்படுத்தி மனிதவளம் மேம்பாட்டுக்கு வழங்கியது . இந்திய மற்றும் உலக அளவில் இணைப்பை ஏற்படுத்தி ஐஐடிகளின் தரத்தை முன்னேற்றுதல் உலக கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்துதல் போன்றவை மூலம் இந்திய கல்விநிறுவனங்களை உலகதரத்தில் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைளுக்கான ரூபாய் 8,700கோடி ரூபாய்யை ஒதுக்கியது நிதியமைச்சகம் .

2017 -2018 ஆம் கல்வியாண்டில் ஐஐடி பெரிய அளவில் ரூபாய் 7856கோடி தொகை ஐஐடிக்கு வழங்கப்படுகிறது . ஏற்கனவே ஐஐடி பெற்ற தொகையானது ரூபாய் 2,468 கோடி ஆகும் .

நிதி விரையம் தேவைதான :

இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாட்டில் படிக்க வழியின்றி பலர் அவதிப்படும் நிலையில் அரசுக்கு இது தேவைதான என்ற கேள்வி பல வல்லுநர்களிடையே ஏற்படுகிறது . தமிழ்நாட்டில் நீட் தொடர்பான கேள்விகள் பல எழுந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது.  அடிப்படை வசதியின்றி நாட்டில் இலட்சக்கணக்கான பள்ளிகள் இயங்கி கொண்டிருக்கின்றன . ஆசிரியர் பற்றாகுறையால் மாணவர்கள் கல்விகற்க இயலாமல் சிக்கலில் இருக்கின்றனர் . பள்ளிகளே இல்லாமல் இன்னும் நாட்டில் சில பகுதிகளில் மரத்தடியிலும் கல்விகற்க இயலாமல் மக்கள் தவித்து கொண்டிருக்கின்றனர் .

ஐஐடிகளை உலகதரத்தில் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது

இந்திய நாட்டில் இந்திய வரிப்பணங்களில் பயிலும் ஐஐடி மாணவர்க்ள் பெரும்பாலும் அயல்நாட்டிற்கு சென்றுவிடுகின்றனர். இந்தியாவின் வரிப்பணத்தில் படித்து அயல்நாட்டுக்கு செய்யும் சேவைக்கு இந்திய அரசு ஏன் சேவை செய்ய வேண்டும் . ஐஐடி முதல் மதிபெண் பெருபவர்களுக்குத்தான் ஐஐடி என்பது என்ன நியாயம், வகுப்பில் கடைசி தரகூறியீட்டில் வரும் மாணவன் இரும்புக்கடையில் வெந்து சாக வேண்டுமா , முதலில் நாட்டில் சிபிஎஸ்சி மற்றும் மாநில கல்வித்தகுதிகளை நிறுத்தி அனைவருக்கும் ஒரு கல்வி வழங்க அரசு என்று முணையும் , கேள்விகள் கேட்க ஆட்கள் இல்லை என்ற எண்ணமா , இன்னும் எவ்வளவு நிதியை அரசு முன்னேற்றம் என்ற பெயரில் செலவு செய்யும் என்னும் கேள்வி அனைவரையும் கேட்க செய்கிறது .

சார்ந்த பதிவுகள்: 

ஐஐடி மாணவர்களின் மன இறுக்கத்தை போக்க ஐஐடி மாணவர்களுக்காக கோரக்பூர் ஐஐடி சில நடவடிக்கை

English summary
here article tell about governmnet funt allotment to increase standard of IIT

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia