பி.எஸ்சி, எம்.எஸ்சி.யைத் தொடர்ந்து எம்.பில் பட்டப்படிப்பிலும் தங்கம் வென்ற தங்க மாணவி!!

Posted By:

சென்னை: பி.எஸ்சி, எம்.எஸ்சி படிப்புகளைத் தொடர்ந்து எம்.பில் படிப்பிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார் அழகு சோமசுந்தரம் என்ற மாணவி.

இவரது தந்தை சோமசுந்தரம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

பி.எஸ்சி, எம்.எஸ்சி.யைத் தொடர்ந்து எம்.பில் பட்டப்படிப்பிலும் தங்கம் வென்ற தங்க மாணவி!!

தந்தையைப் போலவே கணிதத்தில் ஆர்வம் கொண்டு பி.எஸ்சி கணிதம் படித்தார். அப்போது 3 பிரிவுகளில் தங்கம் வென்றார். பி.எஸ்சி கணிதப் படிப்பை பேட்டை ராணி அண்ணா அரசு கல்லூரியில் படித்தார்.

இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியில் எம்.எஸ். சேர்ந்தார். அப்போது பல்கலைக்கழக அளவில் முதல் மாணவியாக தேறி தங்கம் வென்றார்.

இந்த நிலையில் தற்போது மனோண்மணீயம் சுந்தரனா பல்கலைக்கழகத்தில் படித்த எம்.பில் பட்டப்படிப்பிலும் அவர் முதல் வகுப்பில் தேறி தங்கம் வென்றுள்ளார். தொடர்ச்சியாக 5 தங்கம் வென்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் கே. ரோசய்யா கையில் தங்கப் பதக்கத்தையும், பட்டத்தையும் அவர் பெற்றார்.

English summary
A girl student of mathematics, who has won four gold medals during her undergraduate and post-graduate programmes, has does it again by winning another gold medal in M.Phil. Alagu Somasundaram, daughter of S. Somasundaram, Professor of Mathematics of Manonmaniam Sundaranar University, won three gold medals for securing university first rank in Part I Tamil, Part II English and Part III Mathematics (Major), when she did her bachelor’s degree in Rani Anna Government College for Women, Pettai.She made her father proud again when she, a UGC merit scholarship awardee, secured the university first mark while doing M.Sc. in St. John’s College, Palayamkottai.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia