இந்திய மாணவர்களுக்கு உயர்கல்வி அளிக்கும் லண்டன் இன்ஸ்டிடியூட்

Posted By:

சென்னை: இந்திய மாணவர்களுக்கு உயர்கல்வியை அளிக்கிறது லண்டனில் அமைக்கப்பட்டுள்ள கிளியான் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் எஜுகேஷன்.

உலக அளவில் ஹாஸ்பிட்டாலிடி மேனேஜ்மெண்ட் படிப்புகளை வழங்கி வரும் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்று இந்த லண்டன் கிளியான் இன்ஸ்டிடியூட்.

இந்திய மாணவர்களுக்கு உயர்கல்வி அளிக்கும் லண்டன் இன்ஸ்டிடியூட்

ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட் உயர்கல்வி படிப்புகளை உலக அளவில் 3 தலைசிறந்த இன்ஸ்டிடியூட்டுகள் வழங்கி வருகின்றன. அதில் ஒன்று இந்த கிளியான் இன்ஸ்டிடியூட் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம் வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி பயில ஏதுவாக இருக்கும்.

இதுகுறித்து கிளியான் இன்ஸ்டிடியூட் வளாக இயக்குநர் மார்டின் ஹல்சல் கூறியதாவது:

ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட் படிப்புகளைத் தற்போது வழங்கி வரும் பிரபல இன்ஸ்டிடியூட்டில் எங்கள் நிறுவனமும் ஒன்றாக இருப்பதில் பெருமை கொள்கிறோம். இந்தப் படிப்புகளில் சேர இந்திய மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

இந்தியா மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். சர்வதேச அளவில் மாணவர்கள் மிளிர்வதற்கு இந்த உயர்கல்வி உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த கிளியான் இன்ஸ்டிடியூட், லண்டன் ரோஹம்ப்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாகும்.

ரோஹம்ப்டன் பல்கலைக்கழகம் உலகம் முழுதும் 1 லட்சம் மாணவர்களுக்கு மேல் கொண்டு இயங்குகிறது. மேலும் உயர்கல்வி பயில மாணவர்கள் விரும்பும் இடமாக லண்டன் உள்ளது. எனவே லண்டன் நகரில் எங்களது கிளியான் கல்வி வளாகத்தில் அமைத்துள்ளோம் என்றார் அவர்.

மேலும் விவரங்களுக்கு இன்ஸ்டிடியூட்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.glion.edu-ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
Glion Institute of Higher Education, among the top three institutions of higher education for international careers in hospitality management, has announced that it will now accept applications for its London campus from students across the globe, including India. "We are opening our doors to all overseas students this summer. This will give our London campus an extra boost by making life here a truly international experience," said Martin Halsall,

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia