ஜெர்மனியில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

Posted By:

சென்னை: ஜெர்மனியில் பயின்று வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவிலிருந்து அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்குச் சென்று பயில மாணவர்கள் அதிக அளவில் விரும்புகின்றனர். இதேபோல ஜெர்மனிக்குச் சென்று பயிலவும் மாணவர்கள் விரும்புகின்றனர். 2014-15-ல் ஜெர்மனியிலுள்ள பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கு 11,860 மாணவர்கள் பதிவு செய்தனர்.

ஜெர்மனியில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 23 சதவீதம் அதிகமாகும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீப காலங்களில் ஜெர்மனிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் ஜெர்மனிக்குச் சென்று பயின்று வருகின்றனர்.

ஜெர்மனியில் மட்டும் 12 சதவீத வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வருவதாகத் தெரியவந்துள்ளது.

ஆங்கில வழிக் கல்வியில் சர்வதேச அளவிலான படிப்புகளை ஜெர்மனி பல்கலைக்கழகங்கள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தரம் வாய்ந்த கல்வி, சிறந்த பேராசிரியர்கள், குறைந்த அளவிலான பயிற்றுக் கட்டணம் போன்ற காரணங்களால் ஜெர்மனிக்கு வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அந்த ஆய்வி்ல் தெரியவந்துள்ளது.

English summary
There has been a record growth in the number of Indians studying in Germany. The year 2014-15 had 11,860 Indian students enroll in German universities, a massive increase of 23% over the figure of the previous year. The number has more than doubled in the past four years. In the recent years Germany has emerged as a top destination of higher education.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia