சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. சேரமான் காதலி என்ற நூலை எழுதியவர் யார்?
அ. அகிலன் ஆ. கண்ணதாசன் இ. சாண்டில்யன் ஈ. கல்கி
(விடை : கண்ணதாசன்)
2. தமிழக அரசின் இயலிசை நாடகமன்றம் வழங்கிடும் .............. பட்டத்தை பெற்றவர் சுரதா.
அ. கலைமாமணி ஆ. கலைச்சக்கரவர்த்தி இ. கலையரசன் ஈ- தமிழ்ப்பாவலர்
(விடை : கலைமாமணி)

3. முல்லை என்ற இதழை தொடங்கியவர் யார்?
அ. தோப்பூர் திருவேங்கடம் ஆ. கண்ணதாசன் இ. நெடுஞ்செழியன் ஈ. அண்ணாதுரை
(விடை : கண்ணதாசன்)
4. யாவரேனும் ஆள்க? எனத் துஞ்சாமல் தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் என்று எழுதியவர் யார்?
அ. மருதகாசி ஆ. உடுமலை நாராயண கவி இ. முடியரசன் ஈ. மேத்தா
(விடை : முடியரசன்)
5. நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்தநிலையிலும் எனக்குமரணமில்லை என்று கூறியவர் யார்?
அ. வாலி ஆ. கண்ணதாசன் இ. வைரமுத்து ஈ. ரா.கி.ரங்கராஜன்
(விடை : கண்ணதாசன்)
6. திருமண மக்களை வாழ்த்தும் போது இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள். பிரித்ல் பொருள் தராது என்று வாழ்த்தியவர் யார்?
அ. திரு.வி.க. ஆ. பாரதியார் இ. சுரதா ஈ. சாண்டில்யன்
(விடை : சுரதா)
7. சுரதாவின் எந்நூல் தமிழக அரசின் பிரிசினை பெற்றது?
அ. பாவை ஆ. குடும்ப விளக்கு இ. தேன்மழை ஈ. அக்னி குஞ்சு
(விடை : தேன்மழை)
8. ஆட்டனத்தி ஆதிமந்தி என்ற நூலை எழுதியவர் யார்?
அ. அகிலன் ஆ. கண்ணதாசன் இ. கல்கி ஈ. வாலி
(விடை : கண்ணதாசன்)
9. சுரதா பல நூல்களை படைத்திருந்தாலும் அவரை மிக சிறந்த கவிஞராக அடையாளப்படுத்தியது எது?
அ. தேன்மழை ஆ. சாவின் முத்தம் இ. உதட்டில் உதடு ஈ. பட்டத்தரசி
(விடை : தேன்மழை)
10. துறைமுகம் என்ற நூலை எழுதியவர் யார்?
அ. மருதகாசி ஆ. சுரதா இ. வாலி ஈ. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
(விடை : சுரதா)


Click it and Unblock the Notifications












