சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்?
அ. திரு.வி.கல்யாண சுந்தரனார் ஆ. மு.வரதராசனார் இ. பாரதியார் ஈ. வெ.இராமலங்கனார்
(விடை : வெ.இராமலங்கனார்)
2. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா - இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம். கருகத்திருவுளமோ என்று பாடியவர்?
அ. பாரதிதாசன் ஆ. வ.உ.சி இ. பாரதியார் ஈ. கவிமணி
(விடை : பாரதியார்)

3. நாஞ்சில் நாட்டு கவிஞர் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
அ. நாமக்கல் கவிஞர் ஆ. கவிமணி இ. பாரதிதாசன் ஈ. பாரதியார்
(விடை : கவிமணி)
4. பாரதியின் உருவப் படத்தை வரைந்தவர் யார்?
அ. ஆர்ய என்ற பாஷ்யம் ஆ. இரவிவர்மன் இ. இரா.பெருமாள் ராசு ஈ. புகழேந்தி
(விடை : ஆர்ய என்ற பாஷ்யம்)
5. நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா எனப் பாரதியாரை பாரட்டியவர் யார்?
அ. கவிமணி ஆ. பாரதிதாசன் இ. நாமக்கல் கவிஞர் ஈ. சுரதா
(விடை : பாரதிதாசன்)
6. மலரும் மாலையும் என்ற நூலினை எழுதியவர் யார்?
அ. தேசிக விநாயகம் பிள்ளை ஆ. நாமக்கல் கவிஞர் இ. பாரதிதாசன் ஈ. பாரதியார்
(விடை : தேசிக விநாயகம் பிள்ளை)
7. பின்வரும் நூல்களுள் பாரதியார் அவர்களால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல் எது?
அ. பகவத் கீதை ஆ. இராமாயணம் இ. சக்கரவர்த்தி திருமகன் ஈ. மகாபாரதம்
(விடை : பகவத் கீதை)
8. சந்திரிகை என்ற உரைநடை நூலினை எழுதியவர் யார்?
அ. சுரதா ஆ. வாணிதாசன் இ. பாரதியார் ஈ. கண்ணதாசன்
(விடை : பாரதியார்)
9. பின்வரும் நூல்களுள் கவிமணி அவர்களால் எழுதப்படாத நூல் எது?
அ. மலரும் மாலையும் ஆ. காந்தளூர்ச்சாலை இ. தமிழன் இதயம் ஈ. உமர்கய்யாம் பாடல்கள்
(விடை : தமிழன் இதயம்)
10. தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர்?
அ. பாரதியார் ஆ. கவிமணி இ. நாமக்கல் கவிஞர் ஈ. பாரதிதாசன்
(விடை : நாமக்கல் கவிஞர்)


Click it and Unblock the Notifications












