நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற நூலின் ஆசிரியர் யாருன்னு தெரியுமா?... பொது தமிழ் கேள்விகள்

டி.என்.பி.எஸ்.சி, டி.இ.டி, போலீஸ் தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுதமிழ் வினா விடை கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது தமிழ் வினா விடைகள்

1. சின்னசாமி அய்யருக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மகனாக பிறந்தவர் யார்?

அ. பாரதியார் ஆ. பாரதிதாசன் இ. உ.வெ.சா ஈ. வாணிதாசன்

(விடை : பாரதியார்)

2. முடியரசரின் வேறு நூல்களுள் ஒன்று

அ. நெஞ்சு பொறுக்குதில்லையே ஆ. எழிலோவியம் இ. மாங்கனி ஈ. கவிதாஞ்சலி

(விடை : நெஞ்சு பொறுக்குதில்லையே)

நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற நூலின் ஆசிரியர் யாருன்னு தெரியுமா?...  பொது தமிழ் கேள்விகள்

3. சந்திரிகையின் கதை என்ற உரைநடை நூலின் ஆசிரியர் யார்?

அ. கண்ணதாசன் ஆ. மகாகவி பாரதியார் இ. சுரதா ஈ. எவருமில்லை

(விடை : மகாகவி பாரதியார்)

4. உமர்கய்யாமின் காலம் எது?

அ. 10ஆம் நூற்றாண்டு ஆ. 11ஆம் நூற்றாண்டு இ. 12ஆம் நூற்றாண்டு ஈ. 14ஆம் நூற்றாண்டு

(விடை : 11ஆம் நூற்றாண்டு)

5. பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக கனகசுப்புரத்தினம் என்ற தம் பெயரை ............ ஆக ஆக்கிக் கொண்டவர் யார்?

அ. வாணிதாசன் ஆ. முடியரசன் இ. பாரதிதாசன் ஈ. எவருமில்லை

(விடை : பாரதிதாசன்)

6. கண்ணதாசன் வேறு பெயர்களுள் ஒன்று

அ. கவியரசு ஆ. புதுமை கவிஞர் இ. பாவலரேறு ஈ. உவமைக் கவிஞர்

(விடை : கவியரசு)

7. பாரதியார் பாடல்களை முதன் முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்தவர் யார்?

அ. கிருஷ்ணசாமி ஐயர் ஆ. பரலி நெல்லையப்பர் இ. வ.ராமசாமி ஐயங்கார் ஈ. நிவேதிதா தேவி

(விடை : பரலி நெல்லையப்பர்)

8. கண்ணதாசன் வாழ்ந்த காலம் என்ன?

அ. காலம் - 1942 - 1981 ஆ. காலம் - 1905 - 1956 இ. காலம் - 1927 - 1981 ஈ. காலம் - 1905 - 1981

(விடை : காலம் - 1927 - 1981)

9. பின்வரும் நூல்களுள் கவிமணி அவர்களால் எழுதப்பட்ட படைப்பு எது?

அ. ஞான ரதம் ஆ. என் சரித்திரம் இ. என் கதை ஈ. உமர்கய்யாம் பாடல்கள்

(விடை : உமர்கய்யாம் பாடல்கள்)

10. பின்வரும் நூல்களுள் பாரதிதாசன் அவர்களால் எழுதப்பட்ட நூல் எது?

அ. இசையமுது ஆ. புதிய அத்திசூடி இ. தமிழ்மொழி வரலாறு ஈ. லவகுசா

(விடை : இசையமுது)

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Above mentioned General Tamil Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+