சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. குயில் என்னும் இதழ் யாரால் தொடங்கப்பட்டது?
அ. பாரதிதாசன் ஆ. பாரதியார் இ. நாமக்கல் கவிஞர் ஈ. கவிமணி
(விடை : பாரதிதாசன்)
2. சுதேசமித்திரன், இந்தியா போன்ற இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தவர் யார்?
அ. பாரதியார் ஆ. கண்ணதாசன் இ. சுரதா ஈ. வாணிதாசன்
(விடை : பாரதியார்)

3. நாமக்கல் கவிஞர் எந்த சமத்தைச் சேர்ந்தவர்?
அ. சீக்கிய சமயம் ஆ. சமண சமயம் இ. புத்த சமயம் ஈ. இந்து சமயம்
(விடை : இந்து சமயம்)
4. கவிமணி தேசிக விநாயகத்தின் முதல் படைப்பு எது?
அ. அழகம்மை ஆசிரிய விருத்தம் ஆ. காந்நளூர் சாலை இ. ஆசிய ஜோதி ஈ- குழந்தைச் செல்வம்
(விடை : அழகம்மை ஆசிரிய விருத்தம்)
5. குயில் பாட்டின் ஆசிரியர் யார்?
அ. பாரதியார் ஆ. சுரதா இ. பாரதிதாசன் ஈ. வாணிதாசன்
(விடை : பாரதியார்)
6. புரட்சிக்கவி என்னும் சிறப்பினைப் பெற்றவர் யார்?
அ. பாரதியார் ஆ. கவிமணி இ. கண்ணதாசன் ஈ. பாரதிதாசன்
(விடை : பாரதிதாசன்)
7. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
அ. கனக சுப்புரத்தினம் ஆ. சுப்புராசன் இ. தேசிகன் ஈ. சுப்ரமணியன்
(விடை : கனக சுப்புரத்தினம்)
8. உமர்கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் பாடல்களை எழுதியவர் யார்?
அ. சிற்பி ஆ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இ. ந.பிச்சமூர்த்தி ஈ. சி.மணி
(விடை : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)
9. பின்வரும் கவிஞர்களில் குழந்தை மனம் கொண்ட கவிஞர் என்ற வேறு பெயர் கொண்டவர் யார்?
அ. பாரதியார் ஆ. கண்ணதாசன் இ. நாமக்கல் கவிஞர் ஈ. முடியரசன்
(விடை : கண்ணதாசன்)
10. கீழ்க்கண்டவற்றுள் எது பாரதியாரின் படைப்பு அன்று?
அ. பாஞ்சாலி சபதம் ஆ. கண்ணன் பாட்டு இ. குயில் பாட்டு ஈ. இருண்ட வீடு
(விடை : இருண்ட வீடு)


Click it and Unblock the Notifications












