கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?... பொது தமிழ் கேள்விகள்

Posted By:

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது தமிழ் வினா விடைகள்

1. பாரதிக்கு மாககவி என்ற பட்டம் கொடுத்தவர் யார்?

அ. கிருஷ்ணசாமி ஐயர் ஆ. வ. ராமசாமி ஐயங்கார் இ. கல்கி ஈ. பரலி நெல்லையப்பர்

(விடை : வ. ராமசாமி ஐயங்கார்)

2. பின்வரும் கவிஞர்களுள் தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராகப் பதவி வகித்தவர் யார்?

அ. கொத்தமங்கலம் சுப்பு ஆ. மு. கதிரேசச் செட்டியார் இ. வாணிதாசன் ஈ. நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

(விடை : நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை)

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?...  பொது தமிழ் கேள்விகள்

3. குற்றியலுகரத்தின் ஒலியை உவமையாக கையாண்ட முதல் கவிஞர் யார்?

அ. வாணிதாசன் ஆ. கண்ணதாசன் இ. முடியரசன் ஈ. சுரதா

(விடை : வாணிதாசன்)

4. பின்வரும் நூல்களுள் நாமக்கல் கவிஞர் அவர்களால் எழுதப்படாத நூல் எது?

அ. மலைக்கள்ளன் ஆ. சங்கொலி இ. அன்பு செய்த அற்புதம் ஈ. பம்பாய் மெயில்

(விடை : பம்பாய் மெயில்)

5. கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?

அ. சிற்பி ஆ. நா. காமராசன் இ. கி. மணி ஈ. மீரா

(விடை : மீரா)

6. பின்வரும் நூல்களுள் நாமக்கல் கவிஞர் அவர்களால் எழுதப்பட்ட நூல் எது?

அ. குறிஞ்சி திட்டு ஆ. மருமக்கள் வழி மான்மியம் இ. அவளும் அவனும் ஈ. லவகுசா

(விடை : அவளும் அவனும்)

7. மகாகவி என்ற பாராட்டுதலுக்கு உரியவர் யார்?

அ. பாரதியார் ஆ. சுரதா இ. குழந்தைப் புலவர் ஈ. வாணிதாசன்

(விடை : பாரதியார்)

8. பாரதியார் இயற்றிய நூல்களுள் ஒன்று எது?

அ. பாஞ்சாலி சபதம் ஆ. குடும்ப விளக்கு இ. கடல் புறா ஈ. அலையோசை

(விடை : பாஞ்சாலி சபதம்)

9. பின்வரும் பத்திரிக்கைகளில் பாரதியார் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிக்கையின் பெயர் என்ன?

அ. சக்கரவர்த்தினி ஆ. சுதேசமித்திரன் இ. இந்தியா ஈ. நியூ இந்தியா

(விடை : சுதேசமித்திரன்)

10. இருபதாம் நூற்றாண்டின் உரை வளத்தை என்ன காலம் என்பர்?

அ. உரைநடைக் காலம் ஆ. கற்காலம் இ. இலக்கிய காலம் ஈ- இலக்கணக் காலம்

(விடை : உரைநடைக் காலம்)

English summary
Above mentioned General Tamil Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia