சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல்கள் எழுதியவர் யார்
அ. கண்ணதாசன் ஆ. முடியரசன் இ. வாணிதாசன் ஈ. சுரதா
(விடை : கண்ணதாசன்)
2. கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர்?
அ. கண்ணதாசன் ஆ. பாரதிதாசன் இ. வாணிதாசன் ஈ. பாரதியார்
(விடை : பாரதியார்)

3. நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
அ. திரு.வி.க. ஆ. மு.வ. இ. வேங்கடசாமி நாட்டார் ஈ. வெ.இராமலிங்கனார்
(விடை : வெ.இராமலிங்கனார்)
4. கவிமணி தேசிக விநாயகத்தின் முதல் கவிதை நூல் எது?
அ. அழகம்மை ஆசிரிய விருத்தம் ஆ. மலரும் மாலையும் இ. ஆசிய ஜோதி ஈ. குழந்தைச் செல்வம்
(விடை : அழகம்மை ஆசிரிய விருத்தம்)
5. இவற்றுள் வாணிதாசன் எழுதாத நூல் எது?
அ. தீர்த்த யாத்திரை ஆ. இன்ப இலக்கியம் இ. பொங்கல் பரிசு ஈ. சுவரும் சுண்ணாம்பும்
(விடை : சுவரும் சுண்ணாம்பும்)
6. தேசிய கவி என்று போற்றப்படும் கவிஞர் யார்?
அ. பாரதியார் ஆ. பாரதிதாசன் இ. நாமக்கல் கவிஞர் ஈ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(விடை : பாரதியார்)
7. பாரதியார் அவர்கள் மதுரையில் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியின் பெயர் என்ன?
அ. நேதாஜி மேல்நிலைப் பள்ளி ஆ. சேதுபதி உயர்நிலைப் பள்ளி இ. மதுரை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஈ. காந்திஜி உயர்நிலைப் பள்ளி
(விடை : சேதுபதி உயர்நிலைப் பள்ளி)
8. தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி எனப் போற்றப்படுபவர் யார்?
அ. பாவேந்தர் ஆ. பாரதியார் இ. குழந்தைப் புலவர் ஈ. சுரதா
(விடை : பாரதியார்)
9. பாரதிதாசன் அவர்களால் படைக்கப்பட்ட எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு வழங்கப்பட்டது?
அ. பிசிராந்தையார் ஆ. பாண்டியன் பரிசு இ. கண்ணகி புரட்சிக் காப்பியம் ஈ. மணிமேகலை வெண்பா
(விடை : பிசிராந்தையார்)
10. புரட்சிக்கவி என்னும் சிறப்பினைப் பெற்றவர் யார்?
அ. பாரதியார் ஆ. கவிமணி இ. கண்ணதாசன் ஈ. பாரதிதாசன்
(விடை : பாரதிதாசன்)


Click it and Unblock the Notifications












