சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. பாரதியார் வாழ்ந்த காலம் யாது?
அ. 11.12.1882 முதல் 11.09.1921 வரை ஆ. 11.06.1881 முதல் 11.12.1990 வரை இ. 11.06.1981முதல் 11.12.1922 வரை ஈ. 11.06.1882 முதல் 11.12.1919 வரை
(விடை : 11.12.1882 முதல் 11.09.1921 வரை)
2. இவற்றுள் கவிஞர் சுரதா எழுதாத நூல் எது?
அ. அமுதும் தேனும் ஆ. தொடா வாலிபம் இ. உதட்டில் உதடு ஈ. சந்தித்தேன் சிந்தித்தேன்
(விடை : சந்தித்தேன் சிந்தித்தேன்)

3. கவிமணி அவர்கள் மனோன்மனியம் மறுபதிப்பு என்ற திறனாய்வு கட்டுரையை எந்த ஆண்டு எழுதினார்?
அ. 1920 ஆ. 1922 இ. 1924 ஈ. 1925
(விடை : 1922)
4. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குமரி மாவட்டத்தில் உள்ள ..................... என்னும் ஊரில் பிறந்தார்.
அ. குளச்சல் ஆ. தேரூர் இ. மாத்தூர் ஈ- மணக்குடி
(விடை : தேரூர்)
5. பாரதியாரின் அரசியல் குரு யார்?
அ. நிவேதிதா தேவி ஆ. பாலகங்காதர திலகர் இ. பரலி நெல்லையப்பர் ஈ. கிருஷ்ணசாமி ஐயர்
(விடை : பாலகங்காதர திலகர்)
6. பாரதியார் பிறந்த ஊர் எது?
அ. எட்டயபுரம் ஆ. சமயபுரம் இ. திருநெல்வேலி ஈ. ராயபுரம்
(விடை : எட்டயபுரம்)
7. வாணிதாசன் யாருடைய மாணவர்?
அ. பாரதிதாசன் ஆ. சுரதா இ. பாரதியார் ஈ. கவிமணி
(விடை : பாரதிதாசன்)
8. கவிஞர் சுரதாவின் பிறந்த ஊர் எது?
அ. பழையனூர் ஆ. வில்லயனூர் இ. சிறுகூடல்பட்டி ஈ. செங்கப்படுத்தான் காடு
(விடை : பழையனூர்)
9. மலரும் மாலையும் - நூலின் ஆசிரியர் யார்?
அ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆ. திரு.வி.க. இ. வேங்கடசாமி நாட்டார் ஈ. வ.உ.சி.
(விடை : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)
10. திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராக முளைத்தது என்று நாமக்கல் கவிஞரைப் போற்றியவர்?
அ. அறிஞர் அண்ணா ஆ. ஈ.வெ.ரா. பெரியார் இ. மூதறிஞர் இராஜாஜி ஈ- வ.உ.சி.
(விடை : மூதறிஞர் இராஜாஜி)


Click it and Unblock the Notifications












