தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யாருன்னு தெரியுமா?... பொது தமிழ் கேள்விகள்

Posted By:

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது தமிழ் வினா விடைகள்

1. கண்ணதாசன் பெற்றோர்கள் யார்?

அ. சாத்தப்பன் - விசாலாட்சி ஆ. சுப்புராயலு - சீதாலட்சுமி இ. அரங்க திருக்காமு - துளசியம்மாள் ஈ. அருணாசலம் - விசாலாட்சி

(விடை : சாத்தப்பன் - விசாலாட்சி)

2. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?

அ. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆ. ஜீவானந்தம் இ. கண்ணதாசன் ஈ. வெ. இராமலிங்கனார்

(விடை : வெ. இராமலிங்கனார்)

தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யாருன்னு தெரியுமா?...  பொது தமிழ் கேள்விகள்

3. யாருடைய கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தன?

அ. பாரதியார் ஆ. பாரதிதாசன் இ. வாலி ஈ. சுரதா

(விடை : பாரதியார்)

4. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற உரைநடை நூலினை எழுதியவர் யார்?

அ. நாமக்கல் கவிஞர் ஆ. கண்ணதாசன் இ. பாரதியார் ஈ. பாரதிதாசன்

(விடை : பாரதிதாசன்)

5. கம்பரும் வால்மீகியும் - என்ற உரைநடை நூலினை எழுதியவர் யார்?

அ. கவிமணி ஆ. பாரதிதாசன் இ. பாரதியார் ஈ. நாமக்கல் கவிஞர்

(விடை : நாமக்கல் கவிஞர்)

6. கண்ணதாசன் புனைப்பெயர்களுள் ஒன்று?

அ. வணங்காமுடி ஆ. புரட்சிக் கவிஞர் இ. பாவலரேறு ஈ. புதுமைக் கவிஞர்

(விடை : வணங்காமுடி)

7. உமர்க்கய்யாம் என்பவர் யார்?

அ. இத்தாலிக் கவிஞர் ஆ. பாரசீகக் கவிஞர் இ. இந்திக் கவிஞர் ஈ. உலகப் பயணி

(விடை : பாரசீகக் கவிஞர்)

8. பைந்தமிழ் தேர்ப்பாகன் அவனொரு செந்தமிழ்த் தேனீ சிந்துக்கு தந்தை என பாரதியாரை புகழ்ந்த கவிஞர் யார்?

அ. பாரதிதாசன் ஆ. நாமக்கல் கவிஞர் இ. கண்ணதாசன் ஈ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

(விடை : பாரதிதாசன்)

9. இவற்றுள் கண்ணதாசனின் புனைப்பெயர் அல்லாதது எது?

அ. தமிழ் ஒளி ஆ. காரை முத்துப் புலவர் இ. வணங்காமுடி ஈ. கமகப்பிரியா

(விடை : தமிழ் ஒளி)

10. கவிஞர் சுரதாவின் வேறு நூல்களுள் ஒன்று

அ. மங்கையர்க்கரசி ஆ. தொடுவானம் இ. பாட்டு பிறக்குமடா ஈ. இரவு வரவில்லை

(விடை : மங்கையர்க்கரசி)

English summary
Above mentioned General Tamil Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia