போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க... பொது தமிழ் கேள்விகள்

டி.என்.பி.எஸ்.சி, டி.இ.டி, போலீஸ் தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுதமிழ் வினா விடை கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது தமிழ் வினா விடைகள்

1. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. குரம் - குறம்

அ. பக்கம் - குறைத்தல் ஆ. நகரம் - பக்கம் இ. கிராமம் - வரி ஈ. பக்கம் - நகரம்

(விடை : நகரம் - பக்கம்)

2. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. அளை - அலை

அ. கூப்பிடு - குகை ஆ. கடல் அலை - குகை இ. குகை - கடல் அலை ஈ. அழைத்தல் - கடல் அலை

(விடை : குகை - கடல் அலை)

போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க...  பொது தமிழ் கேள்விகள்

3. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. சூள் - சூல்

அ. சபதம் - கர்ப்பம் ஆ. சூழ்ந்துகொள் - சுற்று இ. சுற்று - சபதம் இ. கர்ப்பம் - சபதம்

(விடை : சபதம் - கர்ப்பம்)

4. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. பொலி - பொழி - பொளி

அ. விளங்கு - ஊற்று - கொத்து ஆ. ஊற்று - விளங்கு - கொத்து இ. ஊற்று - கொத்து - விளங்கு ஈ. கொத்து - விளங்கு - ஊற்று

(விடை : விளங்கு - ஊற்று - கொத்து)

5. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. நாள் - நால்

அ. நான்கு - தினம் ஆ. தினம் - நான்கு இ. காலம் - திதி ஈ. நான்கு - திதி

(விடை : தினம் - நான்கு)

6. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. களம் - கலம்

அ. பாத்திரம் - போர்க்களம் ஆ. போர்க்களம் - கப்பல் இ. இரவு - இடம் ஈ. கப்பல் - பாத்திரம்

(விடை : போர்க்களம் - கப்பல்)

7. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. குரவர் - குறவர்

அ. மலைசாதியினர் - சமயக்குரவர் ஆ. சமயக்குரவர் - மக்கள் இ. மக்கள் - சமயக்குரவர் ஈ. சமயக்குரவர் - மலைசாதியினர்

(விடை : சமயக்குரவர் - மலைசாதியினர்)

8. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. இரை - இறை

அ. தீனி - நீர் இறைத்தல் ஆ. நீர் இறைத்தல் - யாசித்தல் இ. யாசித்தல் - தீனி ஈ. நீர் இறைத்தல் - தீனி

(விடை : தீனி - நீர் இறைத்தல்)

9. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. தரி - தறி

அ. அணி - நெசவு ஆ. நெசவு - அணி இ. யாசித்தல் - நெசவு ஈ. நெசவு செய்தல் - அணிதல்

(விடை : அணி - நெசவு)

10. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கனம் - கணம்

அ. நொடிப்பொழுது - பாரம் ஆ. பாரம் - பாளு இ. பளு - நொடிப்பொழுது ஈ. நொடி - பளு

(விடை : பளு - நொடிப்பொழுது)

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Above mentioned General Tamil Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+