போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க... பொது தமிழ் கேள்விகள்

டி.என்.பி.எஸ்.சி, டி.இ.டி, போலீஸ் தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுதமிழ் வினா விடை கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது தமிழ் வினா விடைகள்

1. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. இரு - இறு

அ. நான்கு - இரண்டு ஆ. அமர்ந்து கொள் - முறி இ. கெடு - இரண்டு ஈ. பெரிய - அமர்ந்து கொள்

(விடை : அமர்ந்து கொள் - முறி)

2. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. வாளி - வாலி

அ. கிஷ்கிந்தை அரசன் - வாழ்க ஆ. வீரன் - கிஷ்கிந்தை அரசன் இ. வாழ்க - வீரன் ஈ. அன்பு - ஒரு காதணி

(விடை : வீரன் - கிஷ்கிந்தை அரசன்)

போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க...  பொது தமிழ் கேள்விகள்

3. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. மரை - மறை

அ. மான் - வேதம் ஆ. வேதம் - மான் இ. மறைநூல் - மான் ஈ. வேதநூல் - மான்

(விடை : மான் - வேதம்)

4. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. பனை - பணை

அ. ஒரு வகை மரம் - உயரம் ஆ. பரந்த - மரம் இ. முரசு - ஒரு வகை மரம் ஈ. ஒயரம் - ஒரு வகை மரம்

(விடை : ஒரு வகை மரம் - உயரம்)

5. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. தாள் - தாழ்

அ. தாழ்தல் . பாதம் ஆ. குனிதல் - காகிதம் இ. காகிதம் - தாழ்தல் ஈ. தாழ்தல் - குனிதல்

(விடை : காகிதம் - தாழ்தல்)

6. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. வேள் - வேல்

அ. இறைவன் - கருவி ஆ. ஆயுதம் - ஆசை இ. வேலாயுதம் - மன்மதன் ஈ. கருவி - இறைவன்

(விடை : இறைவன் - கருவி)

7. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. அரம் - அறம்

அ. கருவி - ஈகை ஆ. தருமம் - கருவி இ. ஈகை - கருவி ஈ. அறநூல் . துறவறம்

(விடை : கருவி - ஈகை)

8. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. நீளம் - நீலம்

அ. தாமதம் - நீண்ட ஆ. நிறம் - நெடுமை இ. இருள் - தாமதம் ஈ. நெடுமை - ஒரு நிறம்

(விடை : நெடுமை - ஒரு நிறம்)

9. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. அலகு - அளகு - அழகு

அ. பெண் பறவை - பறவை மூக்கு - வனப்பு ஆ. பறவை மூக்கு - வனப்பு - பெண் பறவை இ. வனப்பு - பறவை மூக்கு - பெண் பறவை ஈ. பறவை மூக்கு - பெண் பறவை - வனப்பு

(விடை : பறவை மூக்கு - பெண் பறவை - வனப்பு)

10. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. குனி - குணி

அ. குனிதல் - வளை ஆ. வளை - ஆலோசித்தல் இ. வில் - ஊமை ஈ. ஆலோசித்தல் - வளைதல்

(விடை : வளை - ஆலோசித்தல்)

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Above mentioned General Tamil Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+