சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தோந்தெடுத்து எழுதுக. ஆன் - ஆண்
அ. பசு - மனிதன் ஆ. மாடு - மனிதன் இ. ஆடு - ஆண்டு ஈ. மனிதன் - பசு
(விடை : பசு - மனிதன்)
2. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தோந்தெடுத்து எழுதுக. துரவு - துறவு
அ. துறத்தல் - கேணி ஆ. பெறுதல் - கேணி இ. கேணி - துறத்தல் ஈ. துறப்பது - குளம்
(விடை : கேணி - துறத்தல்)

3. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தோந்தெடுத்து எழுதுக. கீறி - கீரி
அ. ஒரு விலங்கு - பிளந்து ஆ. அரசன் - வலிமை இ. பூச்சி - பிளத்தல் ஈ. பிளந்து - ஒரு விலங்கு
(விடை : பிளந்து - ஒரு விலங்கு)
4. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தோந்தெடுத்து எழுதுக. மலை - மழை
அ. சிகரம் - மழைநீர் ஆ. குன்று - வெற்பு இ. குளிர்ச்சி - சிகரம் ஈ. மேகம் - குன்று
(விடை : சிகரம் - மழைநீர்)
5. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தோந்தெடுத்து எழுதுக. கண்ணி - கன்னி
அ. ஒரு ராசி - கயிறு ஆ. உமை - தாம்பு இ. மாலை - குமரிப்பெண் ஈ. பெண் - கயிறு
(விடை : மாலை - குமரிப்பெண்)
6. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. குரை - குறை
அ. குறைத்தல் - விலங்கின் ஆ. குறைத்தல் - நாய் குரைத்தல் இ. கைவிடுதல் - விலங்கு ஈ. நாய் குரைத்தல் - குறைத்தல்
(விடை : நாய் குரைத்தல் - குறைத்தல்)
7. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கனி - கணி
அ. பழம் - கணக்கிடு ஆ. கனிவு - கணித்தல் இ. சுரங்கம் - சாரம் ஈ. சாரம் - பழம்
(விடை : பழம் - கணக்கிடு)
8. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கோல் - கோள்
அ. குச்சி - கிரகம் ஆ. கிரகம் - குச்சி இ. புறங்கூறல் - ஆயதம் ஈ. ஆயதம் - குச்சி
(விடை : குச்சி - கிரகம்)
9. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. ஏரி - ஏறி
அ. நீர் உலை - ஊற்று ஆ. ஏறுதல் - நீர் தேக்கம் இ. மேலே ஏறி - உயர்ந்த ஈ. நீர் தேக்கம் - ஏறுதல்
(விடை : நீர் தேக்கம் - ஏறுதல்)
10. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. உரை - உரை
அ. வாசி - உறுதி ஆ. உறுதி - வாசி இ. சொல் - மேல் உறை ஈ. மேல் உறை - சொல்
(விடை : சொல் - மேல் உறை)


Click it and Unblock the Notifications












