சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. சீரிய - சீறிய
அ. வெகுண்ட - சிறப்பான ஆ. சிறப்பான - வெகுண்ட இ. கோபமுற்ற - நல்ல ஈ. வெகுண்ட - மிகுதியான
(விடை : சிறப்பான - வெகுண்ட)
2. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. விளை - விலை
அ. விளைச்சல் - மதிப்பு ஆ. மதிப்பு - விளைவி இ. விலைக்கு விற்றல் - ஒரு மீள்வகை ஈ. விளைச்சல் - ஒரு மீன்வகை
(விடை : விளைச்சல் - மதிப்பு)

3. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. எரி - எறி
அ. நெருப்பு - வீசுதல் ஆ. கடல் - நெருப்பு இ. நெருப்பு - கடல் ஈ. வீசுதல் - நெருப்பு
(விடை : நெருப்பு - வீசுதல்)
4. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. வலி - வளி - வழி
அ. பாதை - காற்று - நோய் ஆ. நோய் - பாதை - காற்று இ. பாதை - நோய் - காற்று ஈ. நோய் - காற்று - பாதை
(விடை : நோய் - காற்று - பாதை)
5. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. வேலம் - வேழம்
அ. தோட்டம் - மரம் ஆ. தோட்டம் - யானை இ. கரும்பு - தோட்டம் ஈ. மூங்கில் - வேலமரம்
(விடை : தோட்டம் - யானை)
6. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கருப்பு - கறுப்பு
அ. நிறம் - பேச்சு ஆ. நிறம் - பஞ்சம் இ. பேச்சு - நிறம் ஈ. பஞ்சம் - நிறம்
(விடை : பஞ்சம் - நிறம்)
7. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. குளம் - குலம்
அ. நீர்நிலை - பாதை ஆ. இனம் - நீர்நிலை இ. நீர்நிலை - இனம் ஈ. பாதை - இனம்
(விடை : நீர்நிலை - இனம்)
8. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கரை - கரை
அ. அழுக்கு - ஓரம் ஆ. ஓரம் - அழுக்கு இ. கடல் - அழுக்கு ஈ. கடல்ஓரம் - அழுக்கு
(விடை : ஓரம் - அழுக்கு)
9. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. மண் - மன்
அ. மன்னன் - மண்வகை ஆ. பெருமை - தரை இ. பூமி - மன்னன் ஈ. தரை - மண்வகை
(விடை : பூமி - மன்னன்)
10. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. வன்மை - வண்மை
அ. கொடை - வளப்பம் ஆ. கொடை - வலிமை இ. வலிமை - கொடை ஈ. வளப்பம் - உறுதி
(விடை : வலிமை - கொடை)


Click it and Unblock the Notifications












