போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க... பொது தமிழ் கேள்விகள்

Posted By:

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது தமிழ் வினா விடைகள்

1. சான்றொப்பம் - என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்

அ. Signature ஆ. Attestation இ. Attachment ஈ. Attested copy

(விடை : Attestation)

2. நெகிழி என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்

அ. Fibre ஆ. Glass இ. Rubber ஈ. Plastic

(விடை : Plastic)

போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க...  பொது தமிழ் கேள்விகள்

3. மருந்தாளுநர் என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்

அ. Doctor ஆ. Physician இ. Scholar ஈ. Compounder

(விடை : Compounder)

4. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க - டவுன் பஸ்

அ. நகரப் பேருந்து ஆ. மாநகரப் பேருந்து இ. குறுந்தடப் பேருந்து ஈ. ஊராட்சி பேருந்து

(விடை : நகரப் பேருந்து)

5. ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க - டோல்கேட்

அ. நுழைவாயில் ஆ. வாகன சாவடி இ. சுங்கச் சாவடி ஈ. சுங்க அங்காடி

(விடை : சுங்கச் சாவடி)

6. ஒப்புகை அட்டை - என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்

அ. Identity card ஆ. Voter id card இ. Assurance card ஈ. Acknowledgment card

(விடை : Acknowledgment card)

7. ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க - டம்ளர்

அ. குவளை ஆ. சொம்பு இ. பாத்திரம் ஈ. ஜாடி

(விடை : குவளை)

8. ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க - ஐடன்டிபிகேசன் சர்டிபிகேட்

அ. ஆளறி மனு ஆ. ஆளறி சான்றிதழ் இ. அடையாள சான்று ஈ. அடையாளச் சீட்டு

(விடை : ஆளறி சான்றிதழ்)

9. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க - எங்கள் வகுப்பறைக்கு கிளாஸ் விண்டோ அமைத்துள்ளனர்

அ. கண்ணாடி ஜன்னல் ஆ. கண்ணாடிச் சாளரம் இ. கண்ணாடி கிளாஸ் ஈ. கண்ணாடி விண்டோ

(விடை : கண்ணாடிச் சாளரம்)

10. தொலைநகலி என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்

அ. Telegram ஆ. Fax இ. Message ஈ. E-Mail

(விடை : Fax)

English summary
Above mentioned General Tamil Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia