சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. காண்புச் சீட்டு என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Visiting card ஆ. Business card இ. Ticket ஈ. Report card
(விடை : Visiting card)
2. தானியங்கி என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Automatic ஆ. Auto இ. Machine ஈ. Aeroplane
(விடை : Automatic)

3. ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க - கலெக்டர்
அ. வருவாய்த்துறை அமைச்சர் ஆ. வட்டாட்சியர் இ. கோட்டாட்சியர் ஈ. மாவட்ட ஆட்சியர்
(விடை : மாவட்ட ஆட்சியர்)
4. கோள் என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Global ஆ. Planet இ. Solar ஈ. Galaxy
(விடை : Planet)
5. புனைக் கதை என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Non- fiction ஆ. Novel இ. Fiction ஈ. Truth
(விடை : Fiction)
6. ஒவ்வாமை என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Disease ஆ. Allergy இ. Illness ஈ. Ailment
(விடை : Allergy)
7. நிழற்படம் என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Shadow Image ஆ. PhotoGraph இ. Picture ஈ. Image
(விடை : PhotoGraph)
8. நேர்ச்சி - என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Accident ஆ. Action இ. Deed ஈ. Ancient
(விடை : Accident)
9. ஆராய்ச்சி நிலையம் - என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்
அ. Laboratory ஆ. Exam Centre இ. Study Centre ஈ. Research Centre
(விடை : Research Centre)
10. ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க - மெட்ராஸ் சிட்டிக்கு செல்ல வேண்டும்
அ. மதராஸ் சிட்டிக்கு செல்ல வேண்டும் ஆ. சென்னைப் பட்டிணத்திற்கு செல்ல வேண்டும் இ. சென்னை சிட்டிக்கு செல்ல வேண்டும் ஈ. சென்னை நகரத்திற்கு செல்ல வேண்டும்
(விடை : சென்னை நகரத்திற்கு செல்ல வேண்டும்)


Click it and Unblock the Notifications












