போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க... பொது தமிழ் கேள்விகள்

Posted By:

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது தமிழ் வினா விடைகள்

1. தேனீர் அங்காடி என்ற சொல்லி ஆங்கிலச் சொல்

அ. Tea shop ஆ. Shop இ. Coffee Stall ஈ. Tea stall

(விடை : Tea stall)

2. கடவுச் சீட்டு என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்

அ. Passport ஆ. Ticket இ. Password ஈ. Pass book

(விடை : Passport)

போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க...  பொது தமிழ் கேள்விகள்

3. காப்பீடு என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்

அ. Agreement ஆ. License இ. Permit ஈ. Insurance

(விடை : Insurance)

4. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க - பையன் டிபெனஸ்-ல் வேலை செய்கிறான்

அ. பையன் இராணுவத்தில் வேலை செய்கிறான் ஆ. பையன் இரயில்வேயில் வேலை செய்கிறான் இ. பையன் க்பலில் வேலை செய்கிறான் ஈ. பையன் பொதுப்பணி வேலை செய்கிறான்

(விடை : பையன் இராணுவத்தில் வேலை செய்கிறான்)

5. நடுவண் அரசு - என்ற சொல்லின் ஆங்கிலச்சொல்

அ. Federal Government ஆ. Intermediate Government இ. State Government ஈ. Central Government

(விடை : Central Government)

6. ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க - டிராமா

அ. நாட்டியம் ஆ. கூத்து இ. நாடகம் ஈ. பாட்டு

(விடை : நாடகம்)

7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க - மணி ஆர்டர்

அ. வரையோலை ஆ. காசோலை இ. தந்தி ஈ. பண விடை

(விடை : பண விடை)

8. கருத்துரு என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்

அ. Proposal ஆ. Objection இ. Aviod ஈ. Neglect

(விடை : Proposal)

9. வருகைப் பதிவேடு - என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்

அ. Evidence Register ஆ. Attendance Register இ. Participation Register ஈ. Concurrence Register

(விடை : Attendance Register)

10. நேர்காணல் என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்

அ. Video Call ஆ. Audio Call இ. Interview ஈ. Telecalling

(விடை : Interview)

English summary
Above mentioned General Tamil Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia