போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க... பொது தமிழ் கேள்விகள்

Posted By:

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது தமிழ் வினா விடைகள்

1. மரபு பிழைகளை நீக்குக

அ. காட்டில் யானை கத்தியது ஆ. காட்டில் யானை கர்ஜித்தது இ. காட்டில் யானை உறுமும் ஈ. காட்டில் யானை பிளிறியது

(விடை : காட்டில் யானை பிளிறியது)

2. மரவு பிழைகளை நீக்குக.

அ. யானைக் கன்று புலிக்கன்று ஆ. யானைக் கன்று புலிப்பறழ் இ. யானைக்குட்டி புலிக்குருளை ஈ. யானைக்குருளை புலிக்கன்று

(விடை : யானைக் கன்று புலிப்பறழ்)

போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க...  பொது தமிழ் கேள்விகள்

3. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ. கம்பன் வீட்டு கட்டு தறியும் கவி பாடும் ஆ. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிப் பாடும் இ. கம்பன் வீட்டுக் கட்டு தறியும் கவி பாடும் ஈ. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்

(விடை : கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்)

4. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ. பொற்கொல்லர் பொன்னைப் பறி என்பர் ஆ. பொற்க்கொல்லர் பொன்னைப் பறி என்பர் இ. பொற்கொல்லர் பொன்னை பறி என்பர் ஈ. பொற்க்கொல்லர் பொன்னை பறி என்பர்

(விடை : பொற்கொல்லர் பொன்னைப் பறி என்பர்)

5. மரபு பிழைகளை நீக்குக

அ. நரி குரைக்க, ஆந்தை பேசியது ஆ. நரி உறும, ஆந்தை பேசியது இ. நரி ஊளையிட, ஆந்தை அலறியது ஈ. நரி கத்த, ஆந்தை கூவியது

(விடை : நரி ஊளையிட, ஆந்தை அலறியது)

6. பிறமொழி சொற்களை நீக்குக - ஆஸ்தி

அ. நிலம் ஆ. வீடு இ. சொத்து ஈ. காடு

(விடை : சொத்து)

7. பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க

அ. கடைத்தெருவில் பழம் வாங்கினேன் ஆ. பஜாரில் பழம் வாங்கினேன் இ. கடையில் பழம் வாங்கினேன் ஈ. கடையில பழம் வாங்குனேன்

(விடை : கடைத்தெருவில் பழம் வாங்கினேன்)

8. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ. இராமனைக் கண்டக் குகனுக்குப் பார்வை மங்கியது ஆ. இராமனை கண்டக் குகனுக்குப் பார்வை மங்கியது இ. இராமனைக் கண்ட குகனுக்குப் பார்வை மங்கியது ஈ. இராமனை கண்ட குகனுக்கு பார்வை மங்கியது

(விடை : இராமனைக் கண்ட குகனுக்குப் பார்வை மங்கியது)

9. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ. அறிஞர் அண்ணா மேடைப் பேச்சுக்குப் புதிய இலக்கணம் படைத்தார் ஆ. அறிஞர் அண்ணா மேடை பேச்சுக்கு புதிய இலக்கணம் படைத்தார் இ. அறிஞர் அண்ணா மேடைப் பேச்சுக்கு புதிய இலக்கணம் படைத்தார் ஈ. அறிஞர் அண்ணா மேடை பேச்சுக்குப் புதிய இலக்கணம் படைத்தார்

(விடை : அறிஞர் அண்ணா மேடைப் பேச்சுக்குப் புதிய இலக்கணம் படைத்தார்)

10. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ. அறிவை பெற வேண்டும் அப்படி பெறும் அறிவு நிலைத்து விளங்க வேண்டும் ஆ. அறிவைப் பெற வேண்டும் அப்படிப் பெறும் அறிவு நிலைத்து விளங்க வேண்டும் இ. அறிவைப் பெற வேண்டும் அப்படி பெறும் அறிவு நிலைத்து விளங்க வேண்டும் ஈ. அறிவை பெற வேண்டும் அப்படிப் பெறும் அறிவு நிலைத்து விளங்க வேண்டும்

(விடை : அறிவைப் பெற வேண்டும் அப்படிப் பெறும் அறிவு நிலைத்து விளங்க வேண்டும்)

English summary
Above mentioned General Tamil Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia