போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க... பொது தமிழ் கேள்விகள்

டி.என்.பி.எஸ்.சி, டி.இ.டி, போலீஸ் தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுதமிழ் வினா விடை கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது தமிழ் வினா விடைகள்

1. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ. வ.உ.சிதம்பரனார் தூங்கிக் கொண்டிருந்தத் தமிழ்மக்களை தட்டி எழுப்பினார் ஆ. வ.உ.சிதம்பரனார் தூங்கி கொண்டிருந்தத் தமிழ்மக்களை தட்டி எழுப்பினார் இ. வ.உ.சிதம்பரனார் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்மக்களை தட்டி எழுப்பினார் ஈ. வ.உ. சிதம்பரனார் தூங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்களை தட்டி எழுப்பினார்

(விடை : வ.உ.சிதம்பரனார் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்மக்களை தட்டி எழுப்பினார்)

2. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ. இளமையைக் கல்விக்கு பயன்படுத்துதலே பொருத்தம் ஆ. இளமையை கல்விக்கு பயன் படுத்துதலே பொருத்தம் இ. இளமையைக் கல்விக்குப் பயன்படுத்துதலேப் பொருத்தம் ஈ. இளமையைக் கல்விக்குப் பயன்படுத்துதலே பொருத்தம்

(விடை : இளமையைக் கல்விக்குப் பயன்படுத்துதலே பொருத்தம்)

போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க...  பொது தமிழ் கேள்விகள்

3. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ. வாழ்க்கையைக் கற்பதுத் தான் உயர்ந்தக் கல்வி ஆ. வாழ்க்கையைக் கற்பது தான் உயர்ந்த கல்வி இ. வாழ்க்கையைக் கற்ப்பது தான் உயர்ந்த கல்வி ஈ. வாழ்க்கையை கற்பது தான் உயர்ந்த கல்வி

(விடை : வாழ்க்கையை கற்பது தான் உயர்ந்த கல்வி)

4. சந்தி பிழை இல்லாத தொடரைத் தேர்க.

அ. பேராசிரியர் கல்வி அமைச்சராக இருக்கிறார் ஆ. பேராசிரியர்க் கல்வி அமைச்சராக இருக்கிறார் இ. பேராசிரியர் கல்வியமைச்சராக இருக்கிறார் ஈ. பேராசிரியர்க்கு கல்வியமைச்சராக இருக்கிறார்

(விடை : பேராசிரியர் கல்வி அமைச்சராக இருக்கிறார்)

5. மரபு பிழைகளை நீக்குக

அ. பட்டிணம் என்பது காவிரிப் பூம்பட்டிணம் ஆ. பட்டிணம் என்பது காவிரி பூம்பட்டணம் இ. பட்டினம் என்பது காவிரிப் பூம்பட்டினம் ஈ. பட்டினம் என்பது காவிரி பூம்பட்டணம்

(விடை : பட்டினம் என்பது காவிரிப் பூம்பட்டினம்)

6. சந்தி பிழை இல்லாத தொடரைத் தேர்க.

அ. உயர்ந்த பண்புகளைப் பெற்றச் சான்றோர் ஆ. உயர்ந்த பண்புகளைப் பெற்ற சான்றோர் இ. உயர்ந்தப் பண்புகளை பெற்ற சான்றோர் ஈ. உயர்ந்தப் பண்புகளைப் பெற்றச் சான்றோர்

(விடை : உயர்ந்த பண்புகளைப் பெற்ற சான்றோர்)

7. பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க

அ. கொடுக்கப்பட்ட புகார் மனு வாபஸ் ஆனது ஆ. கொடுக்கப்பட்ட புகார் மனு திரும்பவும் பெறப்பட்டது இ. கொடுக்கப்பட்ட பெட்டிஷன் மனு வாபஸ் ஆனது ஈ. கொடுக்கப்பட்டவைகளில் பிறமொழி கலப்பு இல்லை

(விடை : கொடுக்கப்பட்ட புகார் மனு திரும்பவும் பெறப்பட்டது)

8. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ. முக மலர்ச்சியையும் அக மலர்ச்சியையும் கொல்லக் கூடியது சினம் ஒன்றே ஆ. முக மலர்ச்சியையும் அக மலர்ச்சியையும் கொல்ல கூடியது சினம் ஒன்றே இ. முக மலர்ச்சியையும் அக மலர்ச்சியையும் கொல்லக் கூடியதுச் சினம் ஒன்றே ஈ. முக மலர்ச்சியையும் அக மலர்ச்சியையும் கொல்ல கூடியது சினம் ஒன்றே

(விடை : முக மலர்ச்சியையும் அக மலர்ச்சியையும் கொல்லக் கூடியது சினம் ஒன்றே)

9. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ. எளியவரை கண்டு எள்ளி நகையாட கூடாது ஆ. எளியவரை கண்டு எள்ளி நகையாடக் கூடாது இ. எளியவரை கண்டு எள்ளி நகையாடக் கூடாது ஈ. எளியவரைக் கண்டு எள்ளி நகையாடக் கூடாது

(விடை : எளியவரைக் கண்டு எள்ளி நகையாடக் கூடாது)

10. சந்தி பிழை இல்லாத தொடரைத் தேர்க.

அ. நேற்று நடந்தச் சிறப்பு நிகழ்ச்சிச் சிறப்பானது ஆ. நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சிச் சிறப்பானது இ. நேற்று நடந்தச் சிறப்பு நிகழ்ச்சி சிறப்பானது ஈ. நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சி சிறப்பானது

(விடை : நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சி சிறப்பானது)

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Above mentioned General Tamil Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+