போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க... பொது தமிழ் கேள்விகள்

டி.என்.பி.எஸ்.சி, டி.இ.டி, போலீஸ் தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுதமிழ் வினா விடை கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது தமிழ் வினா விடைகள்

1. மரபு பிழைகளை நீக்குக.

அ. மாட்டு கொட்டகையில் கிளி கொஞ்சும் ஆ. மாடு தொழுவத்தில் கிளி கத்தும் இ. மாட்டு தொழுவத்தில் கிளி கதறும் ஈ. மாட்டு தொழுவத்தில் கிளி பேசும்

(விடை : மாட்டு தொழுவத்தில் கிளி பேசும்)

2. பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க

அ. எல்லோரும் திருமணத்திற்கு வர வேண்டும் ஆ. சகலரும் திருமணத்திற்கு வர வேண்டும் இ. சகலரும் விவாகத்திற்கு வர வேண்டும். ஈ. எல்லோரும் விவாகத்திற்கு வர வேண்டும்.

(விடை : எல்லோரும் திருமணத்திற்கு வர வேண்டும்)

போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க...  பொது தமிழ் கேள்விகள்

3. பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க

.அ. அவன் ஆஸ்தி எனக்கு வேண்டும் ஆ. அவன் மனை எனக்கு வேண்டும் இ. அவன் லேண்ட்ஸ் எனக்கு வேண்டும் ஈ. அவன் சொத்து எனக்கு வேண்டும்.

(விடை : அவன் சொத்து எனக்கு வேண்டும்.)

4. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ. அமரர்கள் திருப்பால் கடலைக் கடைந்தனர் ஆ. அமரர்கள் திருப்பாற் கடலை கடைந்தனர் இ. அமரர்கள் திருப்பாற்க் கடலைக் கடைந்தனர் ஈ. அமரர்க்ள் திருப்பாற் கடலைக் கடைந்தனர்

(விடை : அமரர்க்ள் திருப்பாற் கடலைக் கடைந்தனர்)

5. பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.

அ. ரிஜிஸ்டர் போஸ்டில் பாரங்களை அனுப்புக அ. ரிஜிஸ்டர் தபாலில் பாரங்களை அனுப்புக இ. பதிவஞ்சலில் பாரங்களை அனுப்புக ஈ. பதிவஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்புக

(விடை : பதிவஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்புக)

6. மரபு பிழைகளை நீக்குக

அ. குதிரை பிளிறும் ஆ. குதிரை குரைக்கும் இ. குதிரை கனைக்கும் ஈ. குதிரை கத்தும்

(விடை : குதிரை கனைக்கும்)

7. பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.

அ. உணவு விடுதியில் உணவு உண்ணுவது உடலுக்குக் கேடு ஆ. போஸ்டாபீஸ் எங்குள்ளது? இ. பஸ் ஃபாஷ்டா போவுது ஈ. கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்

(விடை : உணவு விடுதியில் உணவு உண்ணுவது உடலுக்குக் கேடு)

8. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ. சேக்கிழார்ப் பெரியபுராணத்தை இயற்றினார் ஆ. சேகிழார் பெரியபுராணத்தை இயற்றினார் இ. சேக்கிழார் பெரியபுராணத்தை இயற்றினார் ஈ. சேக்கிழார்ப் பெரியப்புரானத்தை இயற்றினார்

(விடை : சேக்கிழார் பெரியபுராணத்தை இயற்றினார்)

9. வழுஉச் சொற்களை நீக்குக

அ. அடைமழை பெய்தது ஆ. அடைமழை பேஞ்சது இ. அடமழை பெய்தது ஈ. அடமழை பேஞ்சது

(விடை : அடைமழை பெய்தது)

10. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ. பச்சை பட்டாடை அணிந்து நின்றாள் கழனிப் பெண்ணாள் ஆ. பச்சைப் பட்டாடை அணிந்து நின்றாள் கழனி பெண்ணாள் இ. பச்சை பட்டாடை அணிந்து நின்றாள் கழனி பெண்ணாள் ஈ. பச்சைப் பட்டாடை அணிந்து நின்றாள் கழனிப் பெண்ணாள்

(விடை : பச்சைப் பட்டாடை அணிந்து நின்றாள் கழனிப் பெண்ணாள்)

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Above mentioned General Tamil Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+