போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க... பொது தமிழ் கேள்விகள்

Posted By:

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது தமிழ் வினா விடைகள்

1. வழுஉச் சொற்களை நீக்குக

அ. சோறு பருகி, பழம் சாப்பிட்டு, பால் தின்று படுத்தான் ஆ. சோறு உண்டு, பழம் தின்று, பால் பருகி படுத்தான் இ. சோறு தின்று, பழம் உண்டு, பால் சாப்பிட்டு படுத்தான் ஈ. சோறு உண்டு, பழம் சாப்பிட்டு, பால் பருகி படுத்தான்

(விடை : சோறு உண்டு, பழம் தின்று, பால் பருகி படுத்தான்)

2. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ. பன்னிரண்டு ஆழ்வார்களுள் சிறந்தவராகப் போற்றப் பெறுபவர் நம்மாழ்வார் ஆ. பன்னிரண்டு ஆழ்வார்களுள் சிறந்தவராப் போற்ற பெறுபவர் நம்மாழ்வார் இ. பன்னிரண்டு ஆழ்வார்களுள் சிறந்தவராக போற்ற பெறுபவர் நம்மாழ்வார் ஈ. பன்னிரண்டு ஆழ்வார்களுள் சிறந்தவராகப் போற்ற பெறுபவர் நம்மாழ்வார்

(விடை : பன்னிரண்டு ஆழ்வார்களுள் சிறந்தவராகப் போற்றப் பெறுபவர் நம்மாழ்வார்)

போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க...  பொது தமிழ் கேள்விகள்

3. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ. பகுத்துண்டுப் பல்லுயிர் ஓம்பிடப் பயிர்த்தொழிலைப் பாதுகாப்போம் ஆ. பகுத்துண்டுப் பல்லுயிர் ஓம்பிடப் பயிர் தொழிலைப் பாதுகாப்போம் இ. பகுத்துண்டுப் பல்லுயிர் ஓம்பிட பயிர்த்தொழிலை பாதுகாப்போம் ஈ. பகுத்துண்டுப் பல்லுயிர் ஓம்பிட பயிர்த்தொழிலைப் பாதுகாப்போம்

(விடை : பகுத்துண்டுப் பல்லுயிர் ஓம்பிடப் பயிர்த்தொழிலைப் பாதுகாப்போம்)

4. சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க.

அ. பிடித்த கதையைப் படித்த பின் சுருக்கி எழுதினான் ஆ. பிடித்த கதையை படித்த பின் சுருக்கி எழுதினான் இ. பிடித்தக் கதையை படித்த பின் சுருக்கி எழுதினான் ஈ. பிடித்த கதையைப் படித்தப் பின் சுருக்கி எழுதினான்

(விடை : பிடித்த கதையைப் படித்த பின் சுருக்கி எழுதினான்)

5. மரபு பிழைகளை நீக்குக

அ. குயில் கத்தக் காகம் கூவியது ஆ. குயில் கூவ காகம் கத்தியது இ. குயில் கூவக் காகம் கரைந்தது ஈ. குயில் கத்தக் காகம் கரைந்தது

(விடை : குயில் கூவக் காகம் கரைந்தது)

6. வழுஉச் சொற்களை நீக்குக.

அ. அண்ணாக் கயிறு விற்கிறான் ஆ. அரைஞான் கயிறு விற்கிறான் இ. அண்ணாக் கயிறு விக்கிறான் ஈ. அரைஞான் கயிறு விக்கிறான்

(விடை : அரைஞான் கயிறு விற்கிறான்)

7. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ. வாழ்வில் சிறந்தோங்க ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் ஆ. வாழ்வில் சிறந்தோங்க ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் இ. வாழ்வில் சிறந்தோங்க ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் ஈ. வாழ்வில் சிறந்தோங்க ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்

(விடை : வாழ்வில் சிறந்தோங்க ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்)

8. வழுஉச் சொற்களை நீக்குக

அ. விழிக்கின்ற விழியை பார் ஆ. விழிக்கின்ற விழியைப் பார் இ. விழிக்கிற விழியைப் பார் ஈ. முழிக்கிற முழியைப் பார்

(விடை : விழிக்கின்ற விழியைப் பார்)

9. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ. பிறை நிலா நாள்தோறும் வளர்ந்து வருவதை போல நல்லவர்களின் நட்பு வளரும் ஆ. பிறைநிலா தினமும் வளர்ந்து வருவதைப் போல நல்லவர்களின் நட்பு வளரும் இ. பிறை நிலா நாள்தோறும் வழர்ந்து வருவதைப் போல நல்லவர்களின் நட்பு வளரும் ஈ. பிறை நிலா நாள்தோறும் வளர்ந்து வருவதைப் போல நல்லவர்களின் நட்பு வளரும்

(விடை : பிறை நிலா நாள்தோறும் வளர்ந்து வருவதைப் போல நல்லவர்களின் நட்பு வளரும்)

10. சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க.

அ. வாழைப்பளம் சுவையாக உள்ளது ஆ. வாழை பலத்தின் சுவை அருமையாக உள்ளது இ. வாழைபலம் சுவையாக உள்ளது ஈ. வாழைப்பழம் சுவையாக உள்ளது

English summary
Above mentioned General Tamil Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia