சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்று பாடியவர் யார்?
அ. சுந்தரர் ஆ. பரணர் இ. செயங்கொண்டார் ஈ. ஔவையார்
(விடை : ஔவையார்)
2. நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசன் யார்?
அ. இராஜராஜன் ஆ. மனுநீதி சோழன் இ. கரிகால சோழன் ஈ. குலோத்துங்க சோழன்
(விடை : கரிகால சோழன்)

3. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக் கூறியவர் யார்?
.அ. பாவேந்தர் பாரதிதாசன் ஆ. கவிமணி இ. நாமக்கல் கவிஞர் ஈ. கம்பர்
(விடை : பாவேந்தர் பாரதிதாசன்)
4. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறியவர் யார்?
அ. திருவள்ளுவர் ஆ. கம்பர் இ. ஜெயங்கொண்டார் ஈ. திருநாவுக்கரசர்
(விடை : திருவள்ளுவர்)
5. வள்ளலார் என்ற தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் யார்?
அ. இராமலிங்க அடிகள் ஆ. இளங்கோ அடிகள் இ. காந்தியடிகள் ஈ. மு. மேத்தா
(விடை : இராமலிங்க அடிகள்)
6. தமிழ் மொழியின் உபநிடதம் எனப்படுவது எது?
அ. கண்ணன் பாட்டு ஆ. இரங்கற்பா இ. திருவருட்பா ஈ. தாயுமானவர் பாடல்கள்
(விடை : தாயுமானவர் பாடல்கள்)
7. பாவேந்தர் என அழைக்கப்படுவர் யார்?
அ. காரியாசன் ஆ. சீத்தலைச் சாத்தனார் இ. நம்மாழ்வார் ஈ. பாரதிதாசன்
(விடை : பாரதிதாசன்)
8. ஔவைக்கு நெல்லிக் கனியை ஈந்தவன் யார்?
அ. இராஜராஜன் ஆ. அதியமான் இ. வல்வில் ஓரி ஈ. பாரி
(விடை : அதியமான்)
9. சிந்துக்கு தந்தை என்று அழைக்கப்படுவர் யார்?
அ. கவிமணி ஆ. வாணிதாசன் இ. பாரதியார் ஈ. பாரதிதாசன்
(விடை : பாரதியார்)
10. திருமுறைகளை தொகுத்தருளுமாறு வேண்டியவர் யார்?
அ. இராஜ ராஜ சோழன் ஆ. குலோத்துங்கன் இ. நெடுஞ்செழியன் ஈ. இராசேந்திரன்
(விடை : இராஜ ராஜ சோழன்)


Click it and Unblock the Notifications












