பாலர்களின் வீழ்ச்சிக்குக் காரணமானவர்கள் யாருன்னு தெரியுமா? பொது அறிவுக் கேள்விகள்

Posted By:

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்

1. பீகாரின் தலைநகர் எது?

அ. பாட்னா ஆ. சிம்லா இ. திஸ்புர் ஈ. பெங்களூர்

(விடை : பாட்னா)

2. அஸ்ஸாமின் தலைநகர் எது?

அ. இம்பால் ஆ. இட்டா நகர் இ. திஸ்புர் ஈ. அஜாவில்

(விடை : திஸ்புர்)

பாலர்களின் வீழ்ச்சிக்குக் காரணமானவர்கள் யாருன்னு தெரியுமா? பொது அறிவுக் கேள்விகள்

3. அருணாச்சல பிரதேசத்தின் தலைநகர் எது?

அ. இட்டாநகர் ஆ. கேங்டாக் இ. ஹைதராபாத் ஈ. அகர்தலா

(விடை : இட்டா நகர்)

4. பாலர்களின் வீழ்ச்சிக்குக் காரணமானவர்கள்

அ. பிரதிகாரர்கள் ஆ. பாலர்கள் இ. சேனர்கள் ஈ. சௌகான்கள்

(விடை : சௌகான்கள்)

5. சந்திர குப்த மௌரியர் சமண சமயத்தைத் தழுவ காரணமானவர்

அ. ரிஷிப தேவர் ஆ. திஸா இ. ஸ்தூலபாடு ஈ. பத்திரபாகு

(விடை : பத்திரபாகு)

6. சமண சமயத்துவர் சிற்பம் காணப்படும் இடம்

அ. திருச்சி ஆ. சித்தூர் இ. கழுகுமலை ஈ. ஆனைமலை

(விடை : கழுகுமலை)

7. மகதப் பேரரசை ஆட்சி செய்த முதல் வம்சம்

அ. சிசுநாத வம்சம் ஆ. ஆரியங்க வம்சம் இ. நந்த வம்சம் ஈ. குசாண வம்சம்

(விடை : ஆரியங்க வம்சம்)

8. சிந்துவெளி மக்களின் எழுத்துக்கள் எதனுடன் தொடர்புடையவை

அ. தொல் - சமஸ்கிரும் ஆ. தொல் - தமிழ் இ. தொல் - துளுவம் ஈ. தொல் - பாலி

(விடை : தொல் - சமஸ்கிரும்)

9. செம்பு கற்காலம் ஆண்டு

அ. கி.மு. 3000-1500 ஆ. கி.மு. 1500-500 இ. கி.மு. 1000-600 ஈ. கி.மு. 1500-1000

(விடை : கி.மு. 3000-1500)

10. தமிழ் நாட்டில் நூறு ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம்

அ. அரியலூர் ஆ. பல்லாவரம் இ. திருச்சி ஈ. ஆதிச்சநல்லூர்

(விடை : ஆதிச்சநல்லூர்)

English summary
Above mentioned G.K. Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia