சாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு எதுன்னு தெரியுமா?... பொது அறிவுக் கேள்விகள்

Posted By:

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்

1. ஹரப்பா என்ற சிந்து மொழி சொல்லுக்குப் பொருள்

அ. இறந்தவர் மேடு ஆ. முதுபெரும் நகரம் இ. இடுகாட்டு மேடு ஈ. புதையுண்ட நகரம்

(விடை : புதையுண்ட நகரம்)

2. இரும்பு காலத்தை சேர்ந்த நாகரிகம்

அ. ஹரப்பா நாகரிகம் ஆ. சிந்து நாகரிகம் இ. வேதகால நாகரிகம் ஈ. பண்டயக்காலம்

(விடை : வேதகால நாகரிகம்)

சாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு எதுன்னு தெரியுமா?... பொது அறிவுக் கேள்விகள்

3. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிய உதவும் சான்றுகள்

அ. கல்வெட்டுகள் ஆ. செப்புப் பட்டயம் இ. கற்கருவிகள் ஈ. ஓலைச்சுவடிகள்

(விடை : கற்கருவிகள்)

4. சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது?

அ. மைத் உபநிடதம் ஆ. முண்டக உபநிடதம் இ. கதக உபநிடதம் ஈ. சந்தோக்ய உபநிடதம்

(விடை : முண்டக உபநிடதம்)

5. கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?

அ. செம்பு ஆ. இரும்பு இ. வெண்கலம் ஈ. தகரம்

(விடை : செம்பு)

6. சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு

அ. அரிசி ஆ. பார்லி இ. சோளம் ஈ. கம்பு

(விடை : பார்லி)

7. சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படாத விலங்கினம்?

அ. குதிரை ஆ. எருமை இ. செம்மறி ஈ. பன்றி

(விடை : குதிரை)

8. சமண மதத்திற்கு ஆதரவளித்த தென்னிந்திய அரசன்

அ. சடாவர்ம சுந்தப் பாண்டியன் ஆ. கூன்பாண்டியன் இ. விஜயாலய சோழன் ஈ. சேரன் இளஞ்சேரலாதன்

(விடை : விஜயாலய சோழன்)

9. சாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு

அ. யானை ஆ. மான் இ. மாடு ஈ. குதிரை

(விடை : மான்)

10. ஹரப்பா நாகரீகத்தில் துறைமுக நகர்

அ. லோத்தல் ஆ. காலிபங்கன் இ. மொகஞ்சதாரோ ஈ. ரூபர்

(விடை : லோத்தல்)

English summary
Above mentioned G.K. Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia