சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது அறிவு வினா விடைகள்
1. Rh இரத்த வகைகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?
அ. 1940 ஆ. 1956 இ. 1957 ஈ. 1987
(விடை : 1940)
2. இரத்தம் தொடர்பான வியாதிகளில் ........... ஒன்றாகும். இது பெரும்பாலும் ஆண்களையே தாக்குகிறது.
அ. ஹீமோபிலியா ஆ. ஹீமோகுளோபின் இ. ஹைப்போதலாமஸ் ஈ. என்டோலிம்ப்
(விடை : ஹீமோபிலியா)

3. இரத்தத்தில் உள்ள பிரிவுகளைக் கண்டுபிடித்தவர் யார்?
அ. டாக்டர். லான்ஸ்டைனர் ஆ. டாக்டர். லூயி பாஸ்டர் இ. டாக்டர். எட்வர்ட் ஜென்னர் ஈ. டாக்டர். முத்துலெட்சுமி
(விடை : டாக்டர். லான்ஸ்டைனர்)
4. இரத்தத்தின் மாற்றுப் பெயர்கள் என்ன?
அ. குருதி ஆ. செந்நீர் இ. உதிரம் ஈ. இவை அனைத்தும்
(விடை : இவை அனைத்தும் )
5. இரத்தம் உறைதலில் ஈடுபடும் தனிமம் எது?
அ. கால்சியம் ஆ. பொட்டாசியம் இ. கார்பன் ஈ. லித்தியம்
(விடை : கால்சியம்)
6. இரத்த ஓட்டத்தையும் இதயத்தின் செயல்பாட்டினையும் கண்டுபிடித்தவர்
அ. விட்டாகர் ஆ. ஸ்டேன்லி இ. வில்லியம் ஹார்வி ஈ. ஜேம்ஸ்வாட்
(விடை : வில்லியம் ஹார்வி)
7. ஒ பிரிவு ரத்தம் உடையவர்கள் எந்தப் பிரிவு ரத்தம் பெறலாம்.
அ. ஏ மற்றும் ஓ குரூப் ஆ. ஓ குரூப் மட்டும் இ. ஏ மற்றும் பி குரூப்கள் ஈ அனைத்து குரூப்கள்
(விடை : ஓ குரூப் மட்டும்)
8. எந்தப் பிரிவு ரத்தத்தையும் ஏற்றுக் கொள்ளும் ரத்தப்பிரிவு எது?
அ. ஏபி பிரிவு ஆ. ஒ பிரிவி இ. பி பிரிவு ஈ. ஏ பிரிவு
(விடை : ஏபி பிரிவு)
9. இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் தோன்றும் நோய் எது?
அ. லூக்கேமியா ஆ. மஞ்சள் காமாலை இ. காலரா ஈ. பயோரியா
(விடை : லூக்கேமியா)
10. நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற எத்தனை வினாடிகள் ஆகின்றன.
அ. 32 வினாடிகள் ஆ. 60 வினாடிகள் இ. 30 வினாடிகள் ஈ. 64 வினாடிகள்
(விடை : 64 வினாடிகள்)


Click it and Unblock the Notifications












