சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது அறிவு வினா விடைகள்
1. சூரியனின் சக்தி இவ்வுலகில் எதனால் நிலை நிறுத்தப்படுகிறது?
அ. மண் ஆ. நீர் இ. பச்சை நிறத் தாவரங்கள் ஈ. விலங்குகள்
(விடை : பச்சை நிறத் தாவரங்கள்)
2. தாவரங்களில் உணவுப் பொருளைக் கடத்தும் திசு
அ. சைலம் ஆ. ஃபுளோயம் இ. ஸ்கிளீரன்கைமா ஈ. கோலன்கைமா
(விடை : ஃபுளோயம்)

3. தாவரங்களில் தண்ணீரைக் கடத்தும் திசு
.அ. பாரன்கைமா ஆ. ஸ்கிளீரன்கைமா இ. ஃபுளோயம் ஈ. சைலம்
(விடை : சைலம்)
4. நீரில் கரையும் விட்டமின்கள்
அ. பி மற்றும் சி ஆ. டி இ. இ மற்றும் கே ஈ இ
(விடை : பி மற்றும் சி)
5. சந்தனம், மரத்தின் எந்த பாகத்திலிருந்து எடுக்கப்படுகிறது?
அ. இலை ஆ. தண்டு இ. வேர் ஈ. இவை அனைத்தும்
(விடை : தண்டு)
6. காம்பிலை உள்ள தாவரம்
அ. அகேசியா மெலனோஸைலான் ஆ. அகேசியா அராபிகா இ. அகேசியா கான்சின்னா ஈ. அகேசியா சுந்தரா
(விடை : அகேசியா மெலனோஸைலான்)
7. கேமிட்டோபைட்டுகள் என்பவை?
அ. ஒற்றைமைய அமைப்புகள் ஆ. காமிட்டு உருவாக்குபவை இ. புரோதாலஸ்கள் ஈ. இவை அனைத்தும்
(விடை : இவை அனைத்தும்)
8. நீட்டத்தின் இலை அமைப்பு
அ. எதிர் இலை அமைப்பு ஆ. மூவிலை அமைவு இ. மாற்றடுக்கு ஈ. குறுக்கு மறுக்கு
(விடை : எதிர் இலை அமைப்பு)
9. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்
அ. டெல்லி ஆ. லக்னோ இ. கோயம்புத்தூர் ஈ. இவற்றுள் ஏதுமில்லை
(விடை : லக்னோ)
10. டிப்ளோகாக்கஸ் நிமோனியா ஒரு
அ. பூஞ்சை ஆ. வைரஸ் இ. பாக்டீரியம் ஈ. ஆல்கா
(விடை : பாக்டீரியம்)


Click it and Unblock the Notifications












