சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது அறிவு வினா விடைகள்
1. வேளாண் அறிவியல் சார்ந்த தாவர வளர்ப்பு என்பது .......... ஆகும்
அ. பசுமைப் புரட்சி ஆ. உயிரி வேளாண்மை இ. பயிர் பாதுகாப்பு ஈ. தோட்டக்கலை
(விடை : தோட்டக்கலை)
2. எலிகளை அழிக்கப் பயன்படும் வேதிப்பொருள் எது?
அ. காப்பர் (II) அசிட்டோ ஆர்சினைட் ஆ. பொட்டாசியம் நைட்ரேட் இ. அம்மோனியம் சல்பேட் ஈ. மாலத்தியான்
(விடை : காப்பர் (II) அசிட்டோ ஆர்சினைட்)

3. வேம்பு, கொழுஞ்சி, சணப்பை நேரடியாக வயலில் இட்டு மக்கச் செய்து உரமாக்கப்படுவது
.அ. கலப்பு உரம் ஆ. பசுந்தாள் உரம் இ. மண்புழு உரம் ஈ. மட்கிய தொழுஉரம்
(விடை : பசுந்தாள் உரம்)
4. குளோரோஃபில்லில் ........... தனிமம் அதிகமாக உள்ளது
அ. பேரியம் ஆ. மெக்னீசியம் இ. கால்சியம் ஈ பெரிலியம்
(விடை : மெக்னீசியம்)
5. பாதரசத்தின் உருகுநிலை ............ ஆகும்
அ. 234.32K ஆ. 240.25K இ. 235.35K ஈ. 245.60K
(விடை : 234.32K)
6. கோல்மனைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தனிமம் எது?
அ. அலுமினியம் ஆ. மெக்னீசியம் இ. லித்தியம் ஈ. போரான்
(விடை : போரான்)
7. மத்தாப்புத் தொழிலில் பயன்படும் தனிமம்
அ. மெக்னீசியம் ஆ. பேரியம் இ. கால்சியம் ஈ. பெரிலியம்
(விடை : மெக்னீசியம்)
8. சிலை செய்வதற்கான வார்ப்புகள் செய்ய பயன்படும் சேர்மம் எது?
அ. எப்சம் உப்பு ஆ. கால்சியம் சல்பைடு இ. பாரீஸ் சாந்து ஈ. ஜிப்சம்
(விடை : பாரீஸ் சாந்து)
9. கீழ்க்கண்டவற்றுள் காரமண் உலோகம் எது?
அ. சோடியம் ஆ. கால்சியம் இ. லித்தியம் ஈ. பொட்டாசியம்
(விடை : கால்சியம்)
10. மெக்னீசியம் ............. உடன் வினைபுரிந்து மெக்னீசியம் ஆக்சைடையும் ஹைட்ரஜனையும் தருகிறது,
அ. நீராவி ஆ. கார்பன் டை ஆக்ஸைடு இ. ஆக்ஸிஜன் ஈ. கார்பன் மோனாக்சைடு
(விடை : நீராவி)


Click it and Unblock the Notifications












