சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது அறிவு வினா விடைகள்
1. நீல லிட்மஸ் தாளை சிவப்பு நிறமாக மாற்றுவது
அ. காரம் ஆ. அமிலம் இ. சேர்மம் ஈ. தனிமம்
(விடை : அமிலம்)
2. மாட்டிறைச்சியிலுள்ள அமிலம்
அ. அசிட்டிக் அமிலம் ஆ. ஸ்டியரிக் அமிலம் இ. பால்மிடிக் அமிலம் ஈ. பியூட்ரிக் அமிலம்
(விடை : ஸ்டியரிக் அமிலம்)

3. ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் பொதுப்பெயர்
.அ. கோலிக் அமிலம் ஆ. பார்மிக் அமிலம் இ. மியூரியாட்டிக் அமிலம் ஈ. கார்பாலிக் அமிலம்
(விடை : மியூரியாட்டிக் அமிலம்)
4. நடுநிலை பெர்ரிக்குளோரைடுடன் ஊதா நிறத்தைக் கொடுக்கும் சேர்மம்
அ. கீட்டோன் ஆ. ஆல்டிஹைடு இ. ஈதர் ஈ. பீனால்
(விடை : பீனால்)
5. எண்ம அமைப்பை பெற்ற ஒரு தனிமம் எலக்ட்ரானை ஏற்கும் பொது உருவாகும் அயனி
அ. நேர் மின் அயனி ஆ. எதிர் மின் அயனி இ. நடுநிலை ஈ. இவை அனைத்தும்
(விடை : எதிர் மின் அயனி)
6. கரிமச் சேர்மங்கள் அதிகமாக உள்ளதற்கு முக்கிய காரணம்
அ. ஹைட்ரோ கார்பன் ஆ. படி வரிசை இ. மாற்றியம் ஈ. பல்படியாக்கல்
(விடை : மாற்றியம்)
7. தனிமங்களின் அணு எண்ணிக்கையைக் கண்டறிந்தவர்
அ. லோதர் மேயர் ஆ. நியூலாண்ட் இ. மெண்டலீவ் ஈ. மோஸ்லே
(விடை : மோஸ்லே)
8. எத்தொகுதி தனிமங்கள் பாரா காந்தத் தன்மையை பொதுவாகக் கொண்டுள்ளன?
அ. p தொகுதி தனிமங்கள் ஆ. d தொகுதி தனிமங்கள் இ. s தொகுதி தனிமங்கள் ஈ. f தொகுதி தனிமங்கள்
(விடை : d தொகுதி தனிமங்கள்)
9. அனைத்து உலோகங்களைக் காட்டிலும் மிகவும் தகடாக மற்றும் கம்பியாக நீட்டக்கூடிய தன்மையுடையது
அ. சில்வர் ஆ. தங்கம் இ. காப்பர் ஈ. ஜிங்க்
(விடை : தங்கம்)
10. மிகக்குறைந்த அணு எண்ணைக் கொண்ட இடைநிலைத் தனிமம்
அ. ஸ்கேன்டியம் ஆ. டைட்டேனியம் இ. ஜிங்க் ஈ. லாந்தனம்
(விடை : ஸ்கேன்டியம்)


Click it and Unblock the Notifications












