சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது அறிவு வினா விடைகள்
1. 250 லிட்டர் போர்டாக்ஸ் கலவையிலுள்ள வேதிப்பொருள்
அ. 12 கி.கி சுண்ணாம்பு ஆ. 9 கி.கி. மக்னீசியம் சல்பேட் இ. 9 கி.கி. தாமிர சல்பேட் ஈ. 10 கி.கி. கோபால்ட் நைட்ரேட்
(விடை : 9 கி.கி. தாமிர சல்பேட்)
2. பின்வருவனவற்றுள் பாஸ்பரசின் தாது எது?
அ. மோனசைட் ஆ மேக்னசைட் இ. குளோரோசைட் ஈ. குளோரோபைட்
(விடை : குளோரோபைட்)

3. மாவுப் பொருளைக் கண்டறியப் பயன்படுவது
.அ. கந்தகம் ஆ. லிட்மஸ் கரைசல் இ. பாஸ்பரஸ் ஈ. அயோடின்
(விடை : அயோடின்)
4. அலுமினியத்தின் முக்கிய தாது என்ன?
அ. பாக்ஸைட் ஆ. கியூப்ரைட் இ. ஹேமடைட் ஈ. சின்னபார்
(விடை : பாக்ஸைட்)
5. சோடாபானம் தயாரிக்கப் பயன்படும் வாயு
அ. கார்பன் மோனாக்ஸைடு ஆ. கார்பன் டை ஆக்ஸைடு இ. குளோரின் ஈ. ஹைட்ரஜன்
(விடை : கார்பன் டை ஆக்ஸைடு)
6. பித்தளை சேர்மங்கள் யாவை?
அ. தாமிரம், வெள்ளி ஆ தாமிரம், நிக்கல் இ. தாமிரம், துத்தநாகம் ஈ. தாமிரம், அலுமினியம்
(விடை : தாமிரம், துத்தநாகம்)
7. மந்த வாயுக்கு ஓர் உதாரணம் கூறுக
அ. குளோரின் ஆ. அமோனியம் இ. ஓசோன் ஈ. ஆர்கான்
(விடை : ஆர்கான்)
8. சலவைத்தூள் என்பது
அ. சாதாரண உப்பு ஆ. கார உப்பு இ. அமில உப்பு ஈ. இரட்டை உப்பு
(விடை : கார உப்பு)
9. பாதரசம் எதிலிருந்து பெறப்படுகிறது?
அ. கலீனா ஆ. பாக்சைட் இ. சின்னபார் ஈ. காசிடெரைட்
(விடை : சின்னபார்)
10. படிகமில்லாத கார்பனின் மிகத் தூய வடிவம்
அ. எலும்பு கரித்தூள் ஆ. லிக்னைட் இ. சர்க்கரைச் சாம்பல் ஈ. ஆந்த்ரசைட்
(விடை : எலும்பு கரித்தூள்)


Click it and Unblock the Notifications












