சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது அறிவு வினா விடைகள்
1. பின்வருவனவற்றுள் எது கொழுப்பு அமிலமாகும்?
அ. பால்மிடிக் அமிலம் ஆ. ஹைட்ரோ குளோரிக் அமிலம் இ. கந்தக அமிலம் ஈ. நைட்ரிக் அமிலம்
(விடை : பால்மிடிக் அமிலம்)
2. குளோரின் வாயவின் நிறம் என்ன?
அ. பசுமை கலந்த மஞ்சள் ஆ கருநீல ஊதா இ. வெளிர் மஞ்சள் ஈ. கருப்பு
(விடை : பசுமை கலந்த மஞ்சள்)

3. உலையிலிருந்து கிடைக்கும் பாஸ்பரஸ் எது?
.அ. வெண் பாஸ்பரஸ் ஆ. சிவப்பு பாஸ்பரஸ் இ. கருப்பு பாஸ்பரஸ் ஈ. மஞ்சள் பாஸ்பரஸ்
(விடை : வெண் பாஸ்பரஸ்)
4. அச்சு மை தயாரிக்கப் பயன்படுவது எது?
அ. ஈத்தேன் ஆ. மீத்தேன் இ. புரோப்பேன் ஈ. பென்டேன்
(விடை : மீத்தேன்)
5. வெண் பாஸ்பரஸ் எந்த திரவத்தில் கரையும்?
அ. கந்தக அமிலம் ஆ. பாதரசம் இ. குளோரிக் அமிலம் ஈ. கார்பன் டை சல்பைடு
(விடை : கார்பன் டை சல்பைடு)
6. ஊற்றுப்பேனாக்கள் தயாரிக்கப் பயன்படும் பொருள் எது?
அ. சோடியம் ஆ மெக்னீசியம் இ. கந்தகம் ஈ. பாஸ்பரஸ்
(விடை : கந்தகம்)
7. கண்ணீரை உருவாக்குவது எது?
அ. பிட்யூட்டரி ஆ. தைராய்டு இ. லாக்ரிமால் ஈ. அட்ரினல்
(விடை : லாக்ரிமால்)
8. அமில மழையை உண்டாக்கும் வாயு எது?
அ. கரியமில வாயு ஆ. நைட்ரஜன் இ. பிராண வாயு ஈ. கந்தக வாயு
(விடை : கந்தக வாயு)
9. பாஸ்பரஸ் ஒரு
அ. அலோகம் ஆ. உலோகப் போலி இ. உலோகம் ஈ. கலப்புத்தாது
(விடை : அலோகம்)
10. இன்சுலின் என்பது எது?
அ. பெப்டைடுகள் ஆ. ஸ்டார்ச் இ. மோனோ சாக்ரைடு ஈ. மியூக்கோ பாலிசாக்ரைடு
(விடை : பெப்டைடுகள்)


Click it and Unblock the Notifications












