செயற்கை மழையை உண்டாக்கப் பயன்படும் பொருள் எதுன்னு தெரியுமா? .. பொது அறிவுக் கேள்விகள்

Posted By:

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்

1. ஹீலியத்தின் இணைதிறன்

அ. 0 ஆ. 1 இ. 2 ஈ. 3

(விடை : 0)

2. எந்த ஹார்மோனில் அயோடின் உள்ளது?

அ. அட்ரினலின் ஆ. இன்சுலின் இ. தைராக்சின் ஈ. டெஸ்டோஸ்டிரோன்

(விடை : தைராக்சின்)

செயற்கை மழையை உண்டாக்கப் பயன்படும் பொருள் எதுன்னு தெரியுமா? .. பொது அறிவுக் கேள்விகள்

3. ஆபரண தங்கத்தில் உள்ளது

.அ. சில்வர் ஆ. டின் இ. தாமிரம் ஈ. மாங்கனீசு

(விடை : தாமிரம்)

4. செயற்கை மழையை உண்டாக்கப் பயன்படும் பொருள்

அ. வெள்ளி நைட்ரேட் ஆ. மணல் இ. வெள்ளி அயோடைடு ஈ. காப்பர் ஆக்ஸைடு

(விடை : வெள்ளி அயோடைடு)

5. சோடியத்தின் அணு எண்

அ. 11 ஆ. 12 இ. 13 ஈ. 14

(விடை : 11)

6. டைனமைட் தயார் செய்ய பயன்படும் ஆல்கஹால்

அ. கிளைகால் ஆ எத்தில் ஆல்கஹால் இ. கிளிசரால் ஈ. மெத்தில் ஆல்கஹால்

(விடை : கிளிசரால்)

7. மின்துகள்கள் அற்ற கதிர்கள்

அ. ஆல்பா ஆ பீட்டா இ. காமா ஈ. பாஸிடிவ்

(விடை : காமா)

8. சுளுக்கு தலைவலி மருந்தாக பயன்படுகிறது

அ. மெதில் சாலிசிலேட் ஆ. எத்தில் சாலிசிலேட் இ. அசிடைல் சாலிசிலிக் அமிலம் ஈ. சோடியம் சாலிசிலேட்

(விடை : மெதில் சாலிசிலேட்)

9. மீத்தேனின் வடிவமைப்பு

அ. சதுரம் ஆ. சதுர பிரமிடு இ. நான்முகி ஈ. எண்முகி

(விடை : நான்முகி)

10. ராக்கெட் எரிபொருள் ஆனது

அ. ஆக்ஸிஜன் ஆ. ஆக்ஸிஜன் மற்றும் மீத்தேன் இ. ஓசோன் ஈ. ஹைட்ரஸீன் மற்றும் நைட்ரஜன் டெட்ராக்ஸைடு

(விடை : ஹைட்ரஸீன் மற்றும் நைட்ரஜன் டெட்ராக்ஸைடு)

English summary
Above mentioned G.K. Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia