மின்தடை வெப்பநிலைமானிகளில் பயன்படும் தனிமம் எதுன்னு தெரியுமா? .. பொது அறிவுக் கேள்விகள்

Posted By:

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.


பொது அறிவு வினா விடைகள்

1. மூலக்கூறினுள் நிகழும் H பிணைப்பிற்கான சான்று

அ. o - நைட்ரோபீனால் ஆ. m - நைட்ரஜன் பீனால் இ. p - நைட்ராக்ஸைடு ஈ. p - ஹைட்ராக்சி பென்சல்டிஹைடு

(விடை : o - நைட்ரோபீனால்)


2. ஓர் அலையானது

அ. வரையறுக்கப்பட்டது ஆ. நிலையானது இ. குறுக்கீட்டுப் பண்பு அற்றது ஈ. விரவியுள்ளது

(விடை : விரவியுள்ளது)

மின்தடை வெப்பநிலைமானிகளில் பயன்படும் தனிமம் எதுன்னு தெரியுமா? .. பொது அறிவுக் கேள்விகள்


3. சமநிலையில் ஒரு வினை பெற்றிருப்பது?

.அ. இணை வினைகள் ஆ. சிக்கலான வினைகள் இ. எதிரெதிர் வினைகள் ஈ. அடுத்தடுத்து நிகழும் வினைகள்

(விடை : எதிரெதிர் வினைகள்)


4. வினைபடு பொருள்கள் வினை விளை பொருள்களைத் தருகின்ற வினைகள்

அ. சமநிலை வினைகள் ஆ. முன்னோக்கு வினைகள் இ. பின்னோக்கு வினைகள் ஈ. மீள் வினைகள்

(விடை : முன்னோக்கு வினைகள்)


5. தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும் போது அயனியின் ஆரம்

அ. குறைகிறது ஆ. அதிகரிக்கிறது இ. எந்தவித மாற்றமுமில்லை ஈ. இவற்றில் எதுவுமில்லை

(விடை : அதிகரிக்கிறது)


6. மின்தடை வெப்பநிலைமானிகளில் பயன்படும் தனிமம்

அ. இண்டியம் ஆ தாலியம் இ. காலியம் ஈ. போரான்

(விடை : இண்டியம்)


7. வேதிச் சமநிலையின் தன்மை

அ. இயங்குச் சமநிலை ஆ இயங்காச் சமநிலை இ. ஒன்றுமில்லை ஈ. அ மற்றும் ஆ

(விடை : இயங்குச் சமநிலை)


8. உயரிய வாயுக்களுக்கு வினைபுரியும் திறன் குறைவு ஏனெனில்

அ. ஒரேஎண்ணிக்கையுள்ள எலக்ட்ரான்கள் ஆ. அணுக்கருஎண் ஒன்று இ. நிலைத்தஎலக்ட்ரான் அமைப்பை பெற்றுள்ளன ஈ. குறைந்த அடர்த்தி

(விடை : நிலைத்தஎலக்ட்ரான் அமைப்பை பெற்றுள்ளன)


9. கீழ்கண்டவற்றுள் எது ஆவர்த்தனப் பண்பு?

அ. அணு ஆரம் ஆ. எலக்ட்ரான் கவர்தன்மை இ. அயனியாக்கும் ஆற்றல் ஈ. மேற்கூறிய அனைத்தும்

(விடை : மேற்கூறிய அனைத்தும்)


10. கீழே உள்ளவற்றில் எவை அதிக அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன.

அ. கார உலோகங்கள் ஆ. காரமண் உலோகங்கள் இ. உயரிய வாயுக்கள் ஈ. ஹேலஜன்கள்

(விடை : உயரிய வாயுக்கள்)

English summary
Above mentioned G.K. Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia