சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்
1. ரோபாட் என்றால் என்ன?
அ. ஒரு வகையான ராக்கெட் ஆ. கட்டளை இட்டால் செய்யக் கூடிய மனிதனைப் போன்ற ஒரு இயந்திரம் இ. ஒரு வகையான வெடிகுண்டு ஈ. ஆப்ரிக்க காடுகளில் காணப்படும் ஒரு வகை விலங்கு
(விடை : கட்டளை இட்டால் செய்யக் கூடிய மனிதனைப் போன்ற ஒரு இயந்திரம்)
2. காற்றில் ஒலி அலைகள் பரவுவது?
அ. இரண்டு வகையும் ஆ. நெட்டலைகள் இ. குறுக்கலைகள் ஈ. இவற்றில் ஏதுமில்லை
(விடை : நெட்டலைகள்)
3. மெர்க்குரி ஆவி விளக்கு தரும் ஒளியின் நிறம் என்ன?
அ. மஞ்சள் ஆ. பச்சை இ. நீலம் ஈ. சிவப்பு
(விடை : நீலம்)
4. சோனார் கருவியில் பயன்படுவது
அ. ஒலி அலைகள் ஆ. ஒளி அலைகள் இ. மைக்ரோ அலைகள் ஈ. ரேடியோ அலைகள்
(விடை : ஒலி அலைகள்)
5. காமினி என்பது
அ. ஒரு மரம் ஆ. அணு உலை இ. ஒரு நட்சத்திரம் ஈ. ஒரு வகை மரம்
(விடை : அணு உலை)
6. பூமிக்கு நெருக்கமாக உள்ள கோள் எது?
அ. வீனஸ் ஆ. யுரேனஸ் இ. மெர்க்குரி ஈ. புளூட்டோ
(விடை : வீனஸ்)
7. ஒளிவிலகல் எண் அதிகமாக உடையது
அ. வைரம் ஆ. கண்ணாடி இ. நீர் ஈ. பாறை உப்பு
(விடை : வைரம்)
8. ஒளியின் செறிவை அளவிட உதவும் கருவி எது?
அ. பைரோ மீட்டர் ஆ. போட்டோ மீட்டர் இ. சைமோ மீட்டர் ஈ. விஸ்கோ மீட்டர்
(விடை : போட்டோ மீட்டர்)
9. இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் தலைமையகம் எங்க அமைந்துள்ளது?
அ. திருவனந்தபுரம் ஆ. கொச்சி இ. பெங்களூர் ஈ. டில்லி
(விடை : பெங்களூர்)
10. பேனாவின் முனை பிளவுபட்டு இருப்பதன் தத்துவம்
அ. ஓரின ஓட்டுதல் ஆ. நுண்புழை ஏற்றம் இ. விரவல் ஈ. சவ்வூடு பரவல்
(விடை : நுண்புழை ஏற்றம்)


Click it and Unblock the Notifications












