சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்
1. அணுக்கரு விசையைப் பற்றிய கொள்கையை விளக்கியவர் யார்?
அ. டால்டன் ஆ. ஆட்டோஹான் இ. யுகாவா ஈ. ஐன்ஸ்டீன்
(விடை : ஆட்டோஹான்)
2. பென்சில் தயாரிப்பில் உதவும் பொருள் எது?
அ. கார்பைடு ஆ. எப்சம் இ. கிராபைட் ஈ. ஜிப்சம்
(விடை : கிராபைட்)
3. அச்சு எழுத்தில் காரீயமும் வேறு எந்த உலோகமும் சேர்க்கப்படுகிறது?
அ. துத்தநாகம் ஆ. ஆன்டிமணி இ. அலுமினியம் ஈ. பித்தளை
(விடை : ஆன்டிமணி)
4. திரவமானிகள் அமைப்பதில் கீழ்க்காணும் எந்த விதி பயன்படுகிறது?
அ. மிதத்தல் விதி ஆ. சார்லஸ் விதி இ. பாயில் விதி ஈ. ஆம்பியர் விதி
(விடை : மிதத்தல் விதி)
5. பின்வருவனவற்றில் மின்கடத்தி எது?
அ. கிராபைட் ஆ. வைரம் இ. நிலக்கரி ஈ. மரக்கரி
(விடை : கிராபைட்)
6. பூகம்ப அதிர்வுகளை அளவிட உதவும் கருவி
அ. சிஸ்மோ மீட்டர் ஆ. அம்மீட்டர் இ. லாக்டோ மீட்டர் ஈ. ஆல்டி மீட்டர்
(விடை : சிஸ்மோ மீட்டர்)
7. கீழ்க்காணும் மின்காந்த அலைகளில் எது பெரும நெடுக்கத்தைப் பெற்றுள்ளது?
அ. புற ஊதாக் கதிர்கள் ஆ. அகச் சிவப்பு கதிர்கள் இ. எக்ஸ் கதிர்கள் ஈ. காமாக்கதிர்கள்
(விடை : புற ஊதாக் கதிர்கள்)
8. சோனார் கருவி எதைக் கண்டறிய பயன்படுகிறது?
அ. மைக்ரோ அலைகள் ஆ. ரேடியோ அலைகள் இ. ஒளி அலைகள் ஈ. மீயொலி அலைகள்
(விடை : மீயொலி அலைகள்)
9. எலக்ட்ரிக் கீட்டிங் எலமென்ட்ஸ்ஸில் எந்த வகை ஒயர் பயன்படுததப்படுகிறது.
அ. நைக்ரோம் ஆ. அலுமினியம் இ. நைலான் ஈ. நைக்ரோம்
(விடை : நைக்ரோம்)
10. கீழ்க்கண்டவற்றில் கதிரியக்கத் தனிமம் எது?
அ. பிளாட்டினம் ஆ. ரேடான் இ. ஆர்கான் ஈ. ரேடியம்
(விடை :ரேடியம்)


Click it and Unblock the Notifications












