சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்
1. பொதுவாகப் பயன்படும் துணை மின்கலன் எது?
அ. வோல்டா மின்கலம் ஆ. லெக்லாஞ்சி மின்கலம் இ. நுண்துளைக் கலன் ஈ. காரீய அமில சேமக்கலன்
(விடை : காரீய அமில சேமக்கலன்)
2. துணை மின்கலன்களில் நடைபெறும் வேதி வினைகள் ................. ஆகும்
அ. மீளா வினைகள் ஆ. மீள் வினைகள் இ. வேதி வினைகள் ஈ. மேற்கூரிய எதுவுமில்லை
(விடை : மீள் வினைகள்)
3. லெக்லாஞ்சி மின்கலத்தில் மின்பங்கு திரவமாகப் பயன்படுவது எது?
அ. காரீய சல்பேட் ஆ. நீர்த்த கந்தக அமிலம் இ. அம்மோனியம் குளோரைடு ஈ. எத்தனாயிக் அமிலம்
(விடை : அம்மோனியம் குளோரைடு)
4. வோல்டா மின்கலத்தில் இரு மின்வாய்களுக்கும் இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாடு
அ. 1.08 வி ஆ. 1.05 வி இ. 1.18 வி ஈ. 1.15 வி
(விடை : 1.08 வி)
5. கரைசல் வழியே மின்னோட்டம் பாய்ந்து வேதி மாற்றத்தை உருவாக்குவது ...................... ஆகும்.
அ. மின்னழுத்த வேறுபாடு ஆ. மின்தடை இ. மின்சுற்று ஈ. மின்னாற் பகுத்தல்
(விடை : மின்னாற் பகுத்தல்)
6. முதலில் மின்கலத்தை உருவாக்கியவர் யார்?
அ. மாக்ஸ் பிளாங் ஆ ஒயர்ஸ்டெட் இ. மைக்கேல் பாரடே ஈ. வோல்டா
(விடை : வோல்டா)
7. வணிக முறையில் மின்னாற்றல் எந்த அலகால் அளக்கப்படுகிறது
அ. கிலோவாட் மணி ஆ வோல்ட் இ. ஆம்பியர் ஈ. மேற்கூரிய எதுமில்லை
(விடை : கிலோவாட் மணி)
8. மின்னழுத்த வேறுபாட்டை அளக்கப் பயன்படுவது எது?
அ. கால்வகோ மீட்டர் ஆ. வோல்ட் மீட்டர் இ. அம்மீட்டர் ஈ. டைனமோ மீட்டர்
(விடை : வோல்ட் மீட்டர் )
9. எலக்ட்ரான்கள் இயங்கும் மின்னூட்டங்களாக எவற்றில் செயல்படுகின்றன?
அ. குறைக் கடத்திகள் ஆ. அரிதிற் கடத்திகள் இ. உலோகக் கடத்திகள் ஈ. நற்கடத்திகள்
(விடை : உலோகக் கடத்திகள்)
10. டைனமோவைக் கண்டுபிடித்தவர் யார்?
அ. மைக்கேல் பாரடே ஆ. ஓயர்ஸ்டெட் இ. பெஞ்சமின் பிராங்ளின் ஈ. மாக்ஸ் பிளாங்
(விடை : மைக்கேல் பாரடே)


Click it and Unblock the Notifications












