சென்னை: பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்து படித்து பயன் பெறுங்கள். அரசு வேலைகளுக்கு தக்க முறையில் தயாராகுங்கள். இது ஒரு தொடர். தொடர்ந்து படித்து வாருங்கள்.

பொது அறிவு வினா விடைகள்
1. ஒரு அணு எலக்ட்ரானை இழந்து ---------- மின் சுமையைப் பெறுகிறது
அ. நேர் ஆ. எதிர் இ. புரோட்டான் ஈ. இவற்றுள் ஏதுமில்லை
(விடை : நேர்)
2. வெற்றிடக் குடுவையைக் கண்டுபிடித்தவர் யார்?
அ. ஜேம்ஸ்வாட் ஆ. ஜேம்ஸ் டிவார் இ. வில்லியம் பாண்ட் ஈ. தாம்சன்
(விடை : ஜேம்ஸ் டிவார்)
3. மனிதனால் செய்யப்பட்ட முதல் (செயற்கை இழை) கரிம சாயம்
.அ. மாவெய்ன் ஆ. நைலான் இ. பாலியெஸ்டர் ஈ. டெரிகாட்டன்
(விடை : மாவெய்ன்)
4. கீழ்க்கண்ட உலோகங்களில் அறை வெப்ப நிலையில் திரவமாகக் காணப்படும் உலோகம் எது?
அ. யுரேனியம் ஆ. ரேடியம் இ. துத்தநாகம் ஈ. பாதரசம்
(விடை : பாதரசம்)
5. நியூட்டன் எதன் அலகு ஆகும்?
அ. இடப்பெயர்ச்சி ஆ. உந்தம் இ. திசைவேகம் ஈ. விசை
(விடை : விசை)
6. கண்ணாடி வடிவமாற்றம் அடைவது?
அ. பாகுநிலை ஓட்டத்தால் ஆ. நழுவுதல் இ. தாவுதலால் ஈ. வழுக்குதலால்
(விடை : பாகுநிலை ஓட்டத்தால்)
7. மின்னழுத்த மானியில் பயன்படுத்தப்படும் கம்பியின் மின்தடை வெப்பநிலை எண்
அ. எதிர்குறி ஆ. சுழி இ. குறைவு ஈ. அதிகம்
(விடை : குறைவு)
8. பின்வருவனவற்றுள் மிகவும் அடர்த்தியானது எது?
அ. கரி ஆ. லிக்னைட் இ. வைரம் ஈ. இவை மூன்றுமே
(விடை : வைரம்)
9. லிஃப்ட் இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
அ. டன்லப் ஆ. ஒட்டிஸ் இ. எடிசன் ஈ. கில்லட்
(விடை : ஓட்டிஸ்)
10. லாக்டோ மீட்டர் எதன் அடர்த்தியை அளக்கப் பயன்படுகிறது?
அ. பால் ஆ. அமிலம் இ. பாதரசம் ஈ. காரம்
(விடை : பால்)


Click it and Unblock the Notifications












