ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை!

Posted By:

சென்னை : இந்திய ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ஸ்கேல் - 1 ஆபிசர்ஸ் - அசிஸ்டன்ட் மனேஜர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் கல்வித் தகுதி, வயது வரம்பு ஆகியவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலை . ஸ்கேல் - 1 ஆபிசர்ஸ் - அசிஸ்டன்ட் மனேஜர்
கல்வித் தகுதி - பி.இ / பி.டெக் / ஏதேனும் பட்டப்படிப்பு
பணியிடங்கள் - 33
ஊதியம் - Rs. 49500 / மாதம்
பணியிடம் - இந்தியா முழுவதும்
கடைசி தேதி - 27 மார்ச் 2017

ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை!

குறைந்தபட்ச தகுதி - பொறியியல், மருத்துவம், நிதி, தகவல் தொழிற்நுட்பம், சட்டம் மற்றும் சி.எஸ் கல்வித் தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு - குறைந்தபட்ச வயது 21 அதிபட்ச வயது வரம்பு 30 மற்றும் வயது வரம்பு தளர்வு அரசு கைடுலைன்னில் உள்ளபடி அனுமதிக்கப்படும்.

மேலும் விரிவான விபரங்கள்

சட்டத்துறையில் - 3 காலியிங்கள் (எல்எல்பி, பில் படித்திருக்க வேண்டும் மேலும் எல்எல்எம் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்)

அக்ரி கல்சர் மற்றும் ஹார்ட்டி கல்சர் - 4 காலியிடங்கள் ( பிஎஸ்சி அக்ரி கல்சர் மற்றும் ஹார்ட்டி கல்சர் படித்திருக்க வேண்டும் மேலும் எம்எஸ்சி படித்தவர்களுக்கு முன்னுரிமைன வழங்கப்படுகிறது)

ஹிந்தி -

1 காலியிடம் (ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்டிருத்தல் வேண்டும். அல்லது ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஹிந்தியை ஒரு பாடமாக கொண்டிருத்தல் வேண்டும்) மொழிப்பெயர்ப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது மொழிப்பெயர்ப்பில் அனுபவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சிவில் எஞ்ஜினியர் - 1 காலியிடம் (பி.இ சிவில்)

மெரைன் எஞ்ஜினியரிங் - 1 காலியிடம் (பி.இ மற்றும் பி.டெக் மெரைன் எஞ்ஜினியரிங்)

ஏரனாட்டிக்கல் எஞ்ஜினியரிங் - 2 காலியிடங்கள் (பி.இ, பி.டெக் ஏரனாட்டிக்கல் எஞ்ஜினியரிங்)

சார்ட்டடு அக்கோன்டன்ட் - 2 காலியிடங்கள் (சிஏ மற்றும் ஐசிடபிள்யூ)

இன்பர்மேஷன் மற்றும் டெக்னாலஜி - 2 காலியிடங்கள் ( பி.இ, பி.டெக் எஞ்ஜினியர், எம்சிஏ, ஐடி, மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்)

மெடிக்கல் - 2 காலியிடங்கள் (எம்பிபிஎஸ்) மேலும் வாழ்க்கை மற்றும் சுகாதாரத்துறையில் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

நிபுணர்கள் - 2 காலியிடங்கள் (இந்தியக் காப்பீட்டு கணிப்பு பீடம் அல்லது லண்டன் காப்பீட்டு கணிப்பு நிறுவனம் மூலம் நிறுவப்பட்ட நிறுவனங்களில் 7 தாள்களில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சார்ந்தவர்கள் 60% மதிப்பெண்களுடனும், எஸ்சி எஸ்டி பிரிவினர் 55% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இத்துடன் சிடி6 கட்டாயப்படுத்தப்)

கம்பெனி செக்ரட்ரி - 1 காலியிடம் (சிஎஸ் மற்றும் சிஎஸ் இன்டர்)

எக்ஸிக்கியூட்டிவ் பிஏ - 1 காலியிடம் (ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் ஸ்டெனோகிராப், எம்எஸ் ஆபிஸ் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்)

ஜெனரல் போஸ்ட் - 10 (ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு) முதுகலைப் பட்டம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்)

மேலே உள்ள அனைத்து பணியிடங்களுக்கும் எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

8 மார்ச் 2017ம் தேதியிலிருந்து 27 மார்ச் 2017ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 27 மார்ச் 2017 தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாளாகும்.

தேர்வு - ஏப்ரல்/மே மாதம் 2017 நுழைவுச்சீட்டு தேர்விற்கு 7 நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் வெளியிடப்படும்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏப்ரல் 24 முதல் 27 ஏப்ரல் 2017 வரை ஆன்லைனில் இலவசப் பயிற்சிக் கொடுக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு இணையதளத்தை அனுகவும்.

English summary
GIC Recruitment 2017-General Insurance Corporation of India announced notification for Scale-I Officers-Assistant Manager.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia